வாழைப்பழம் இருந்தா உடனே இந்த கண்டிஷனரை ட்ரை பண்ணி பாருங்க. வாழைப்பழம் போலவே முடி நல்லா வழவழப்பா ஷைனிங்கா இருக்கும். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அற்புதமான ஹேர் கண்டிஷனர்.

banana hair mask
- Advertisement -

பொதுவாக எல்லோரும் முடி அடர்த்தியாக வளர வேண்டும் நீளமாக வளர வேண்டும் முடி உதிர்வை தடுக்க வேண்டும் இப்படியானவற்றிற்குத்தான் நாம் தேடி தேடி நிறைய குறிப்புகளை கண்டுபிடிப்போம். ஆனால் முடி ஆரோக்கியமாக இருந்தால் தான் இவை அனைத்துமே சாத்தியம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் கொடுக்க வேண்டும். அது நம் உண்ணும் உணவில் ஒரு புறம் எடுத்துக் கொண்டாலும் கூட தலைக்கு எண்ணெய், கண்டிஷனர், பேக், இவற்றின் மூலமும் நம் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தர வேண்டும்.

அப்படியான ஒரு ஊட்டச்சத்து மிக்க ஹேர் கண்டிஷனரை வாழைப்பழத்தை வைத்து எப்படி எளிமையாக தயாரிப்பது என்று தான் இந்த அழகு குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த கண்டிஷனரை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது நம் முடி நல்ல ஆரோக்கியமாக வளவளப்புடன் ஷைனிங்காக காற்றின் அலைப்பாயும் கூந்தலை நிச்சயமாக பெறலாம்.

- Advertisement -

வாழைப்பழ கண்டிஷனர் தயாரிக்கும் முறை
இதற்கு நல்ல பழுத்த வாழைப்பழம் இரண்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த வாழைப்பழத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதே போல் இரண்டு டீஸ்பூன் தேன், இரண்டு டீஸ்பூன் தேங்காய் பால், இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் இவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பௌலில் வாழைப்பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தேங்காய் பால், தேன் கலந்து முதலில் நன்றாக குறைத்துக் கொள்ளுங்கள். இது ஓரளவுக்கு பேஸ்ட் போல குழைந்து வந்தவுடன் தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் சேர்த்து இந்த முறை இன்னும் நன்றாகவே குழைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு கடைசியாக ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து விடுங்கள். இதை எந்த காரணத்திற்காகவும் மிக்ஸியில் சேர்த்து அடித்து விடாதீர்கள்.

- Advertisement -

இப்போது கலந்த இந்த கலவையை உங்கள் தலைக்கு தேய்க்க வேண்டும். இதை தேய்ப்பதற்கு முன்பாக உங்கள் தலையில் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு இதெல்லாம் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். இதுவும் மிகவும் முக்கியம். அதன் பிறகு இந்த கண்டிஷனரை உங்கள் முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனி முடி வரை தேய்த்து அப்படியே விட்டு விடுங்கள். இது ஒரு அரை மணி நேரம் உங்கள் தலையில் நன்றாக ஊறட்டும். அதன் பிறகு ஏதாவது மைல்டான ஷாம்பு போட்டு தலையை அலசி விடுங்கள்.

அதன் பிறகு முடியை இயற்கையான முறையில் ஆற வைக்க வேண்டும். அதாவது முடி ஆற வைக்க இப்போது ஹேர் ட்ரெயர் போன்றவை எல்லாம் பலரும் பயன்படுத்துகிறார்கள். அதை எல்லாம் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் ஆற வைக்க வேண்டும். இந்த பேக்கை வாரம் ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது முடிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: முகத்தை பராமரிக்க நேரம் இல்லாதவர்கள் கூட இந்த ஒரு கிரீமை இரவு படுக்கப் போவதற்கு முன்பாக பயன்படுத்தினால் முகம் என்றும் இளமையாகவும், வெண்மையாகவும் மாறிவிடும்.

அத்துடன் முடி ஷைனிங் ஆகவும் பளபளப்பாகவும் பார்ப்பவர் கண்ணை பறிக்கும் அளவிற்க்கு இருக்கும். இந்த வாழைப்பழம் நிச்சயம் நல்ல பலனைத் தரும். இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -