- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilதலைமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர

தலைமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் பலருக்கும் அடர்த்தியான நீளமான கருமையான கூந்தலை இருந்தது. ஏன் ஆண்கள் கூட அன்றைய காலத்தில் நீளமான கூந்தலை தான் வளர்த்து வந்தார்கள். ஆனால் இப்பொழுதோ நம்முடைய தலைமுடி என்பது அடர்த்தி இன்றி நீளம் குறைவாகவும் அதேசமயம் விரைவிலேயே நரைமுடி ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளிலும் இருக்கிறது. இவை அனைத்தையும் நீக்கி இயற்கையான முறையில் முடியை அடர்த்தியாக வளர செய்வதற்கு தயார் செய்ய வேண்டிய ஒரு எண்ணையைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

தலைமுடி வறட்சியின் காரணமாகவும் உஷ்ணத்தின் காரணமாகவும் தலைமுடி உதிர்தல் என்பது அதிக அளவில் ஏற்படுகிறது. இதை நீக்குவதற்கு தான் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் இருக்க கூடிய இளந்தலைமுறையினர் தலையில் எண்ணெய் வைப்பதை விரும்புவது கிடையாது. மேலும் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் எண்ணெய் வைத்து குளிப்பதற்கு பல விதங்களில் யோசிப்பார்கள். அதனால் தான் அவர்களுக்கு தலை முடி தொடர்பான பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம். மிகவும் எளிதில் தயார் செய்யக்கூடிய ஒரு எண்ணெய் நம்முடைய தலைமுடி தொடர்பான பல பிரச்சினைகளை தீர்க்கும். அந்த எண்ணையை எப்படி தயார் செய்வது என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்க்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ இரவு தலையில் தேய்த்து ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விடலாம். இப்படி செய்தாலே நம்முடைய தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள்தான் தேவைப்படும். ஒன்று செக்கிலாட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய், அடுத்தது வெற்றிலை, கடைசியாக சின்ன வெங்காயம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் அளவிற்கு தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் வைத்து விடுங்கள். பிறகு இதில் ஆறு எண்ணிக்கையில் இருக்கக்கூடிய சின்ன வெங்காயத்தை நன்றாக தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு நான்கு வெற்றிலையை எடுத்து அதை நன்றாக சிறு சிறு துண்டுகளாக கிழித்து தட்டி எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கக்கூடிய ஈரப்பதம் முற்றிலும் நீங்கி எண்ணையின் சல சலப்பு குறையும் வரை குறைந்த தீயிலேயே வைத்து விடுங்கள். இதன் சலசலப்பு குறையும் பொழுது எண்ணெயும் நிறம் சிறிது பச்சையாக மாறியிருக்கும்.

- Advertisement -

அப்படி சலசலப்பு நீங்கியதும் நாம் அடுத்து இருந்து இறக்கிவிடலாம். இதை அன்று முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் அதை வடிகட்டி தலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எண்ணையை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் தலை முடி உதிர்தல் என்பது படிப்படியாக குறைவதோடு தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர ஆரம்பிக்கும். மேலும் தலையில் இருக்கக்கூடிய பொடுகு பிரச்சனையும் முற்றிலும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: கருத்த உதடும் சிவப்பாக மாற

தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க தயங்குபவர்கள் கூட வாரத்திற்கு ஒரு முறை இந்த எண்ணையை பயன்படுத்தி தேய்த்து குளிப்பதன் மூலம் தலை முடி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மேலும் நாம் விரும்பியது போல் அழகான கருமையான அடர்த்தியான தலைமுடியை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்