- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகருத்த உதடும் சிவப்பாக மாற

கருத்த உதடும் சிவப்பாக மாற

- Advertisement -

நம்முடைய முகத்திற்கு கூடுதல் அழகை தரக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் நம்முடைய உதடுகள். பலருக்கும் இந்த உதடுகள் கருமை நிறத்தில் இருக்கும். அதை மறைப்பதற்காக கெமிக்கல் நிறைந்த உதட்டு சாயங்களை பயன்படுத்துவார்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் சில பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நம் உதட்டில் இருக்கக்கூடிய கருமையை முற்றிலும் நீக்க முடியும், இயற்கையான சிவந்த உதட்டை பெற முடியும். அதைப்பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

கருத்த உதடும் சிவப்பாக மாற

பொதுவாகவே உதடுகள் சிவந்த நிறமுடையவர்களாக தான் இருக்கும். ஆனால் பலருக்கும் அந்த இயற்கையான நிறம் மாறி உதடு கருத்து இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்கள்தான். இறந்த செல்கள் வெளியே வராமல் அப்படியே இருப்பதால்தான் உதட்டின் நிறம் என்பது மாறிவிடும். இதை நீக்கி உதட்டின் இயற்கையான நிறத்தை கொண்டு வருவதற்கு ஒரு எளிமையான வழிமுறை இருக்கிறது. இதை நாம் வாரத்திற்கு மூன்று முறை செய்வதன் மூலம் விரைவிலேயே நம்முடைய கருத்த உதடு சிவப்பாக மாறிவிடும்.

- Advertisement -

இதற்கு நமக்கு நான்கு பொருட்கள் தேவைப்படும். அவை கஸ்தூரி மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, வெள்ளை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/4 ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சளை சேர்க்க வேண்டும். இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதிலிருந்து நான்கு ஐந்து சொட்டுகள் மட்டும் இதில் சேர்க்க வேண்டும். பிறகு இதை பேஸ்ட் ஆக மாற்றுவதற்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது பேஸ்ட் தயாராகிவிட்டது.

இதை நம்முடைய உதட்டில் நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கால் மணி நேரம் அதை அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் மசாஜ் செய்துவிட்டு சாதாரண தண்ணீரை வைத்து கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீங்குவதோடு கருமை நிறமும் மாறி படிப்படியாக இயற்கையான சிவப்பு நிறம் வந்துவிடும். இதில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சுத்தமான தேனை கூட பயன்படுத்தலாம். அதே போல் இரவு படுக்கச் செல்லும் பொழுது உதட்டில் தேனை தடவி விட்டு படுப்பதன் மூலமும் அது நம்முடைய உதட்டிற்கு தேவையான ஈரப்பதத்தை தந்து உதடை கருக்க விடாமல் அதனுடைய இயற்கையான நிறத்தை மேம்படுத்த உதவும்.

- Advertisement -

இதையம் படிக்கலாமே: முக சுருக்கத்தை நீக்கி இளமை தோற்றத்தை பெற

வீட்டில் இருக்கக் கூடிய எளிமையான இந்த பொருட்களை பயன்படுத்தியே நம்முடைய கருத்துப் போன உதட்டை சிவப்பாக மாற்ற முடியும். ஒரு முறை முயற்சி செய்தாலே நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்