நெய்யை வெண்ணெயாக மாற்றும் அதிசய லிங்கம்.. ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

lingam1
- Advertisement -

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பல அதிசயங்களை கண்டதுண்டு. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது நெய் ஊற்றினால் அது வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வாருங்கள் அந்த அதிசயம் கோவிலை பற்றி பார்ப்போம்.

siva lingam

பெங்களூருவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிவகங்கா என்னும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ளது கங்கேஸ்வரர் என்னும் அற்புத குகை கோவில். இந்த கோவிலில் சிவன் லிங்க வடிவில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

- Advertisement -

இந்த கோவிலில் எப்போதும் ஒரு அற்புதம் நடந்துகொண்டே இருக்கிறது. சுமார் 5 அடி உயரம் உள்ள சிவ லிங்கத்தின் மீதும் நெய்யை ஊற்றினால் அது வெண்ணெயாக மாறுகிறது. ஆம் நாம் அபிஷேகத்திற்காக கொண்டு செல்லும் நெய்யை அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் சில மந்திரங்களை சொல்லி அந்த நெய்யை லிங்கத்தின் மீதும் ஊற்றுகிறார் பின்னர் அதை நமக்கு பிரசாதமாக தருகிறார். அனால் வியப்பு என்ன வென்றால் பிரசாதமாக தருகையில் நாம் கொடுத்த அந்த நெய் வெண்ணெயாக மாறி இருக்கிறது.

 sivaganga

இங்கு சிவனுக்கு நடக்கும் இந்த அதிசய அபிஷேகத்தை யார் வேண்டுமானாலும் நேரில் பார்க்க அனுமதி உண்டு. லிங்கத்தின் மீது ஊற்றப்படும் நெய் எப்படி இங்கு மட்டும் வெண்ணெயாக மாறுகிறது என்பதை அறிய விஞ்ஞானிகள் எவ்வளவோ முயற்சித்தும் இதுவரை விடை கிடைக்க வில்லை. இன்றுவரை இங்கு நடக்கும் இந்த அதிசய நிகழ்வு ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

- Advertisement -

இந்தக் கோவிலின் பிரமிப்பை நினைத்து முடிப்பதற்குள் அடுத்ததாக மற்றொரு சிவன்கோவிலின் ஆச்சரியத்தையும் பார்த்துவிடுவோம். இங்கு ஒரு சிவன் கோவிலில் லிங்கத்திற்கு நெய்யினை அபிஷேகமாக ஊற்ற ஊற்ற கீழே விழாமல் உறைந்துபோய் அப்படியே இருக்கின்றதாம். இந்தக் கோவில் எங்கு உள்ளது என்பதை பார்த்து விடுவோம் வாருங்கள்.

 sivaganga

கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள வடக்குநாதர் சிவன் கோவில் தான் அது. பல நூற்றாண்டுகளாக இந்த கோவிலில் சிவனுக்கு செய்துவரும் நெய் அபிஷேகம் அப்படியே உறைந்து போய் சிவலிங்கத்தை மூடி விட்டதாம். உறைந்த இந்த நெய்யின் உயரமானது சுமார் நான்கு அடிகளாக உயர்ந்துள்ளது.

 sivaganga

இந்த மூடிய லிங்கத்தை சுற்றி பல விளக்குகள் ஏற்றி வைத்தாலும் அந்த சூட்டில் கூட நெய் உருகவில்லை. வெயில் காலத்திலும் உருகவில்லை. இன்றளவும் அந்த ஆலயத்தில் தொடர்ந்து நெய்யபிஷேகம் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. உருகிய நெய்யானது சிறுதுளி கிடைத்தாலும் அதை பக்தர்கள் அமிர்தமாக கருதுகின்றனர். இதனை சாப்பிட்டால் உடலில் எந்தவித நோயாக இருந்தாலும் குணமாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து இருக்கிறது. கலியுகத்திலும் கடவுள் இருக்கின்றார் என்பதை நிரூபிக்கவே இப்படிப்பட்ட திருவிளையாடல்கள் நிகழ்த்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் வருகிறது. எது எப்படியாக இருந்தாலும் அறிவியலையும், விஞ்ஞானத்தையும் தாண்டிய ஒரு சக்தியானது இந்த பூமியில் வலம் வருவதை ஏதாவது ஒரு சம்பவங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறது.

நேரம் இருந்தால் இதையும் படியுங்கள்
பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவிலை பற்றி படிக்க இதை கிளிக் செய்யுங்கள்.

- Advertisement -