பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா?

0
481
vettuvan-kovill

இந்தியாவில் பல விசித்திரமான கோவில்களை நாம் பார்த்ததுண்டு. அந்த வகையில் கிட்டதட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு அதிசய குகை கோவிலை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

vettuvan kovi

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பேரூராட்சியில் அமைந்துள்ளது வெட்டுவான் கோவில். ஊரின் மையப் பகுதியிலிருந்து கிட்ட தட்ட 1 கி.மீ. தொலைவில் அந்த ஊரின் பெயரை கொண்ட மலையில் அமைந்துள்ளது இந்த கோவில்.

கி.பி. 800 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவில் ஒரே பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. காரணம் இது சற்று தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் அமைந்துள்ளது.

kazhukumalai vettuvan kovil

ஒரு மிக பெரிய பாறையை கிட்டதட்ட 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை அக்காலத்திலேயே கோயிலாக செதுக்கியுள்ளனர். சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இந்த கோவிலின் பனி ஏனோ முழுமையாக நிறைவடையவில்லை. சிகரம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ள நிலையில் கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

vettuvan kovil

கோவில் விமானத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு நந்தி சிலைகள் உள்ளன. அதோடு இந்த கோவிலில் உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்களும் உள்ளன. இந்த கோவில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவிலை போன்று உள்ளது. கைலாசநாதர் கோவிலும் ஒரே பாறையை கொண்டு செதுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான கோவில் என்பது குறிப்பிடத்தக்கது..