இஞ்சி பூண்டு பேஸ்ட் இப்படி அரைத்து ஸ்டோர் செய்து வைத்தால் 1 வருடம் ஆனாலும் சுவையும், மணமும், நிறமும், மாறாமல் ஃப்ரெஷ்ஷாக அப்படியே இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

ginger-garlic-paste

பெரும்பாலும் நாம் சமைக்கும் மசாலா சேர்த்த சமையல் வகைகளில், இஞ்சி பூண்டு பேஸ்டுக்கு முதலிடம் உண்டு. ஆனால் வீட்டில் வெறும் இரண்டு பேர், மூன்று பேர் தான் உள்ளார்கள் என்றால் குறைந்த அளவில்தான் சமைப்போம். அதற்கு தகுந்தது போல, கொஞ்சமாக இஞ்சி பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் அது முழுமையாக அரையாமல் தொல்லை கொடுக்கும். கொஞ்சம் அதிகமான அளவில் அரைத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால் அதனுடைய நிறம் மாறிப் போகும். சில வீடுகளில் சில நாட்களிலேயே அது கெட்டுப் போகவும் செய்கின்றது. இந்த இஞ்சி பூண்டு பேஸ்டை பக்குவமாக எப்படி அரைத்து வைத்தால் ஒரு வருடத்திற்கு கூட கெட்டுப் போகாது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஃப்ரிட்ஜில் வைக்காமல் கூட, இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் கெடாமல் இருக்குமா? என்ற இந்தக் கேள்விக்கான பதில் இந்த பதிவின் இறுதியில்.

ginger 3-compressed

இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை அரைத்துவைத்து ஒரு வருடத்திற்கு நாம் பயன்படுத்த போவது கிடையாது. நாம் அரைக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பெரும்பாலும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்குள் நமக்கு தீர்ந்து விடும் அல்லவா? அதனால தாராளமா நீங்க இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி அரைச்சு ஃப்ரிட்ஜ்ல ஸ்டோர் செஞ்சுக்கலாம். ஒரு வருடம் வரை ஸ்டோர் செய்ய ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்.

400 கிராம் அளவு வெள்ளைப்பூண்டை எடுத்துக்கொண்டால், 300 கிராம் அளவு இஞ்சி நமக்குத் தேவைப்படும். அதாவது பூண்டை விட, இஞ்சி ஒரு பங்கு குறைவாகத் தான் இருக்க வேண்டும். கடைகளில் அரைக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை இப்படித்தான் தயார் செய்கிறார்கள். உங்களுக்கு இஞ்சியின் வாசம் அதிகமாக பிடிக்குமென்றால் இரண்டையும் சம விகிதத்தில் எடுத்துக் கொண்டாலும் தவறில்லை. அது அவரவருடைய இஷ்டம்தான்.

garlic

முதலில் இஞ்சியை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடிய வைத்து விடுங்கள். அதன் பின்பு அதன் மேலே இருக்கும் தோலை சுத்தமாக சீவி ஓரளவிற்கு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக பூண்டை தோலுரித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1 டேபிள்ஸ்பூன் அளவு உப்பை வெறும் கடாயில் போட்டு லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். உப்பில் இருக்கும் தண்ணீரும் இஞ்சி பூண்டு பேஸ்டை கெட்டுப் போக வைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தான் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் சுத்தமாக தண்ணீர் இருக்கக் கூடாது. மிக்ஸி ஜாரை முன்பே கழுவி நன்றாக துடைத்து உலர வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் முதலில் தயாராக இருக்கும் இஞ்சியை போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த இஞ்சி நன்றாக மைய அரைத்த பின்பு வறுத்து வைத்திருக்கும் உப்பையும் பூண்டையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

mixer

இஞ்சியையும் பூண்டையும் தண்ணீர் விட்டு நாம் அரைக்கவே கூடாது என்பதுதான் இந்த இடத்தில் நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தண்ணீருக்கு பதிலாக நல்லெண்ணெயை ஊற்றி இஞ்சி-பூண்டு விழுதை அரைக்க வேண்டும். 4 லிருந்து 5 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் உங்களுக்கு தேவைப்படும். அதற்கு மேலே உங்களுக்கு தேவைப்பட்டால் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

nallennai

இப்போது உங்களுக்கு தேவையான இஞ்சி பூண்டு விழுது தயாராக இருக்கும். இதை கண்ணாடி பாட்டிலில் மாற்றி பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்தால் ஃப்ரீசரில் கட்டாயம் வைக்க கூடாது. ஏனென்றால் ஃப்ரீசரில் வைத்தால் கண்ணாடி பாட்டில் சில சமயங்களில் விரிசல் விடும்.

mixer1

அப்படி இல்லை என்றால் சில்வர் கன்டெய்னரில் ஸ்டோர் செய்து ஃப்ரீசரில் வைத்தால் ஒரு வருடத்திற்கு கூட இந்தப் பேஸ்ட் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை. மிக்ஸி ஜாரில் இருந்து ஒரு ஸ்பூனில் எடுத்து தான் பாட்டிலில் போடவேண்டும். கை வைக்கக்கூடாது.

ginger-garlic-paste1

இஞ்சி பூண்டு பேஸ்டை எடுத்து பயன்படுத்தும் போதும் ஸ்பூனில் ஈரம் இருக்க கூடாது. நீங்கள் வெளிநாட்டில் இருப்பவர்களாக இருந்தால் இந்த பேஸ்டை நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்து வைக்க வேண்டுமென்றால் கட்டாயமாக ஃப்ரீசரில் தான் வைக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதாக இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

ginger-garlic-paste2

இன்னொரு முக்கியமான விஷயம் இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்த பின்பு 5 நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்க வில்லை என்றாலும், கெட்டுப் போகாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வீட்டில் குறைவான அளவுகளில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு அரைத்து சோதித்து தான் பாருங்களேன். அவசர அவசரமாக காலை உணவை செய்பவர்களுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், பேச்சுலர் ஆக இருக்கும் ஆண்களுக்கும் இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க!