தக்காளி மட்டும் இருந்தா போதும்? இந்த லாக் டவுனில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, காரசாரமான இந்த சட்னியை சூப்பரா செய்திடலாம்.

chutney

இப்போது லாக்டோன் காரணமாக நம்மால் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வீட்டில் இட்லி தோசை சப்பாத்தி ஊத்தாப்பம் பணியாரம் இந்த டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சேர்க்காமல் சுலபமான முறையில், அதே சமயம் ஆரோக்கியமான முறையில் ஒரு சட்னியை செய்ய வேண்டும். இந்த சட்னியை அரைப்பதற்கு வெளியே சென்று எந்த பொருட்களையும் வாங்கி வரவேண்டும் என்ற அவசியம் இருக்காது. வீட்டில் அடிப்படையாக இருக்கும் மளிகை பொருட்களை வைத்தே இந்த சட்னியை அரைத்துவிட முடியும். கட்டாயம் வீட்டில் தக்காளியும் இஞ்சியும் இருக்கும் அல்லவா? இந்த இரண்டு பொருட்களை வைத்து இன்னும் சில பொருட்களை சேர்த்து சுலபமான சட்னியை எப்படி அரைப்பது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

tomato

ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். வரமல்லி – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், மிளகாய் – 4, வெந்தயம் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் எண்ணெய் ஊற்றாமல் பொன்னிறமாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக பழுத்த 2 தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி 20 கிராம், அளவு எடுத்துக்கொண்டு தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, வெட்டிய தக்காளியையும் இஞ்சியையும் சேர்த்து, இதனுடன் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி வைத்து, 2 லிருந்து 3 மூன்று நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.

ginger 3-compressed

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வறுத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களையும், வதக்கி வைத்திருக்கும் தக்காளி இஞ்சி இந்த இரண்டு பொருளையும் சேர்த்து, 1 ஸ்பூன் வெல்லம், தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் மீண்டும் ஒரு கடாயை வைத்து, 4 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், தாளித்து மிக்ஸியில் அரைத்த விழுதை கடாயில் சேர்த்து, 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு இஞ்சியின் பச்சை வாடை நீங்கும் வரை, மிதமான தீயில் 5 லிருந்து 7 நிமிடங்கள் இந்த சட்னியை வதக்கி கொள்ளுங்கள்.

chutney1

அவ்வளவு தான். உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இஞ்சி தக்காளி சட்னி தயார். இந்த சட்னி இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.