15 நாட்களில் முடி உதிர்வை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி இதற்கு உண்டு. முடி வளர்ச்சியில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு நல்ல வித்தியாசத்தை காணலாம்.

hair6

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி, முடி உதிர்வை கட்டுப்படுத்த எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. ஆனால் மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களை வைத்தே முடி உதிர்வை சுலபமாக, அதிவிரைவாக கட்டுப்படுத்த முடியும். அதே சமயம் முடி உதிர்ந்த இடத்தில், மீண்டும் சீக்கிரமே முடி வளரத் தொடங்கிவிடும். இதற்கு செலவும் அதிகமாக ஆகாது. இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் 2. இஞ்சி, தேங்காய் எண்ணெய். இந்த இரண்டு பொருளுமே எந்தவித பக்க விளைவுகளையும் நமக்கு கொடுக்காது.

ginger 3-compressed

மிக மிக குறைந்த செலவில் தலைமுடி பிரச்சினையை நீக்கும் அந்தக் குறிப்பை நேரத்தைக் கடத்தாமல் தெரிந்துகொள்வோம் வாருங்கள். ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த இஞ்சியை கேரட் துருவலில் நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய ஸ்பூன் அளவு இஞ்சி துருவல் போதுமானது.

200ml அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் துருவிய இஞ்சியை சேர்த்து ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலக்குங்கள். ஒரு வடிகட்டி மூலம் இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இஞ்சியை குப்பையில் போட்டு விட வேண்டும். இப்போது, இஞ்சி வாசத்தோடு சேர்ந்த தண்ணீர் நமக்கு கிடைத்து விட்டது.

ginger

இந்த இஞ்சி தண்ணீரில், 2 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது தலைமுடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு தரும் கலவையை நாம் தயார் செய்துவிட்டோம். இந்த தண்ணீரை உங்கள் கைகளாலேயே தொட்டு உங்களுடைய தலையில் வேர்க்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு தலைமுடியில் கீழ் பக்கம் வரை இந்தத் தண்ணீரை நன்றாக தடவிக் கொண்டை கட்டிக்கொள்ளுங்கள்.

5 லிருந்து 10 நிமிடங்கள் இந்த தண்ணீரை கொண்டு உங்களுடைய தலைமுடியில் மசாஜ் செய்துவிட்டு, அதன் பின்பு 10 நிமிடங்கள் தலைமுடியில் நன்றாக ஊறியதும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை நன்றாக அலசி விடுங்கள். மசாஜ் செய்யும், நேரம் ஊற வைக்கும் நேரம் இரண்டும் சேர்த்து மொத்தமாக 20 நிமிடங்கள் இந்த தண்ணீர் உங்களுடைய தலையில் இருக்கவேண்டும் அவ்வளவுதான்.

வாரத்தில் மூன்று நாட்கள் இதை செய்து வந்தால், 15 நாட்களில் உங்களுடைய தலைமுடியில் இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். தலையில் இருக்கக்கூடிய அரிப்பு, முடி உதிர்வு பிரச்சினை, பொடுகு தொல்லை, இதிலிருந்து விடுபட்டு முடி அடர்த்தியாக வளர இந்த குறிப்பு உங்களுக்கு மிகமிக உபயோகமானதாக இருக்கும். இது மிகவும் சுலபமான குறிப்பும் கூட. இந்த தண்ணீரை தலையில் போட்டால் எரியும் என்ற பயம் வேண்டாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மட்டும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கவும்.