என்னதான் நாம் நிறமாக இருந்தாலும் வெளியே சென்று விட்டு வந்தோம் என்றால் நம் முகத்தில் ஒருவித கருமை என்பது ஏற்பட்டுவிடும். இதேபோல் வயதாக ஆக கருந்திட்டுகள், கரும்புள்ளிகள் என்று வந்து கொண்டே இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் நம் கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுவதும், கண்களுக்கு பக்கவாட்டில் சுருக்கங்கள் ஏற்படுவது இவை அனைத்தும் சேர்ந்து நம்முடைய இளமையை முதுமையாக மாற்றி தோற்றமளிக்க செய்கிறது. முதுமையை வெளிப்படுத்தும் அனைத்தையும் நீக்கி இளமையுடனும் பொலிவுடன் திகழ்வதற்கு செய்யக்கூடிய ஒரு பேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முகத்தில் கரும்புள்ளிகளா? கருத்திட்டீங்களா? கண்களை சுற்றி கருவளையமா? கருப்பாக இருக்கிறீர்களா? என்று பல தரப்பட்ட கிரீம்கள் கடைகளில் விற்கின்றன. இவை அனைத்தையும் வாங்கி உபயோகப்படுத்துவதன் மூலம் நம்முடைய முகத்தில் தேவையில்லாத ரசாயன பொருட்களை தடவி அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். இவை அனைத்தையும் தவிர்த்து விட்டு இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நம்முடைய முகத்தை பிரகாசமாக மாற்ற முடியும். அதைப்பற்றி பார்ப்போம்.
இதற்கு நமக்கு முதலில் உபயோகப்படுவது உருளைக்கிழங்கு சாறு. உருளைக்கிழங்கு சாறை நாம் அப்படியே நம் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள், அழுக்குகளை நீங்கும். கருந்திட்டுகளும் கரும்புள்ளிகளும் நீங்கும். இதோடு மட்டுமல்லாமல் கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையமும் அதே போல் சுருக்கங்களும் நீங்கும். ஒரு தோல் நீக்காத சிறிய உருளைக்கிழங்காக பார்த்து ஒரு உருளைக்கிழங்கு எடுத்து அதை கேரட் உரசுவது போல் உரசி அதிலிருந்து சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஸ்பூன் அளவிற்கு உருளைக்கிழங்கு சாறை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் காய்ச்சாத பசும்பால் இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது உருளைக்கிழங்கு சாறும் பாலும் சரிசமமாக இருக்க வேண்டும். இதனுடன் இரண்டு சொட்டு மட்டும் கிளிசரால் சேர்க்க வேண்டும். அடுத்ததாக இதில் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெய் சேர்க்க வேண்டும். இதை நான்கையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் கயோலின் பவுடர் என்று கடைகளில் விற்கும். அந்த பவுடரை வாங்கி அதிலிருந்து இரண்டு ஸ்பூன் அளவு இதில் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக வரும் வரை கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கயோலின் பவுடர் என்பது வேறு ஒன்றும் கிடையாது. இயற்கையில் கிடைக்கக்கூடிய மண். இதுவும் ஒருவிதமான முல்தானி மெட்டி வகையை சேர்ந்ததுதான். இதை நம்முடைய முகத்தில் போடும் பொழுது நம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்கும். மேலும் முகம் பிரகாசமாக திகழும். இப்பொழுது இந்த பேஸ்ட் தயாராகிவிட்டது. இதை அப்படியே நம்முடைய முகத்திலும், கழுத்திலும், கைகளிலும் தடவிக்கொள்ளலாம். 20 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்வதன் மூலம் நம் முகத்தில் ஒருவித பொலிவு ஏற்படும். காண்பவர்கள் அனைவரும் வியந்து கேட்கும் அளவிற்கு நல்ல மாற்றத்தை நம்மால் காண முடியும்.
இதையும் படிக்கலாமே:என்றும் இளமையாக இருக்க
இதில் சேர்க்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய முகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய பொருட்களாக திகழ்ந்ததால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் நம்முடைய முகத்தை இளமையாகவும், கருமை இல்லாத பொலிவான முகமாகவும் மாற்ற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.