என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையால் இன்றும் பல பேர் பியூட்டி பார்லருக்கு சென்று முகத்திற்கு என்னென்னமோ செய்து கொண்டு இருக்கிறார்கள். அவை அனைத்தும் ஒரு சில நேரங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்தாலும், அந்த தவறை தொடர்ந்து செய்கிறார்கள். இயற்கையான முறையில் நமக்கு பல அழகு சாதன பொருட்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானதாக இருக்கக்கூடியது தான் ஜாதிக்காய். ஜாதிக்காயை வைத்து எப்படி நம்முடைய இளமையை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
நாட்டு மருந்து என்று சொன்னாலே அதில் ஜாதிக்காய் என்ற பொருள் கண்டிப்பாக சேர்ந்திருக்கும். அவ்வளவு மருத்துவ குணம் வாய்ந்தது தான் ஜாதிக்காய். இந்த ஜாதிக்காயை நாம் உள்ளுக்குள் எடுத்துக் கொண்டால் சிறப்பு என்பது நமக்கு தெரியும். இதே ஜாதிக்காயை முகத்திற்கு பூசும் பொழுது என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்ப்போம்.ஜாதிக்காய் பொடியாகவே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது.
அல்லது நாம் ஜாதிக்காயை வாங்கி இடித்து பொடி செய்து தயாரித்து வைத்துக் கொள்ளலாம். ஃபேஷியல் செய்வதற்கு ஒப்பான பலனை இந்த ஜாதிக்காய் முகப்பூச்சு நமக்கு கொடுக்கிறது. மேலும் முகத்தில் ஏற்பட்டிருக்கும் கருமையை போக்குவதற்கு இந்த ஜாதிக்காய் மிகவும் உதவுகிறது. கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை நீங்கவும், முகத்தில் ஏற்பட்டிருக்கும் சுருக்கங்கள் மறையவும் உதவுகிறது.
இரண்டு ஸ்பூன் ஜாதிக்காய் தூளை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை சேர்க்க வேண்டும். மேலும் ஒரு ஸ்பூன் தேனை அதில் கலக்க வேண்டும். இதை அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது முகத்தை நன்றாக சுத்தமான நீரால் கழுவ வேண்டும். பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
கருமை நீங்க:
ஜாதிக்காய் இரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு பவுலில் போட வேண்டும். அதில் காய்ச்சாத பசும்பால் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை சாதாரண தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து வாரத்தில் மூன்று நாட்கள் மேற்கொண்டு வர முகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட கருமையாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே: மெலிந்த கூந்தல் அடர்த்தியாக
எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கையான முறையில் என்றும் இளமையாக இருக்கும் இந்த அழகு குறிப்பு பயன்படுத்தி இளமையுடன் என்றும் வாழலாம்.