குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக 10 நிமிடத்தில் சூப்பரான பாரம்பரியமான முறையில் கோதுமை அப்பம் எப்படி செய்து தருவது? சுவையான கோதுமை அப்பம் தயாரிக்கும் முறை!

wheat-appam
- Advertisement -

பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் ஆரோக்கியமான முறையில் பணியாரம் அல்லது அப்பம் என்று சொல்லப்படும் இந்த கோதுமை இனிப்பை செய்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்திலும் ஆரோக்கியம் உள்ளதால் நீங்கள் அடிக்கடி செய்து கொடுக்கலாம். சுவையான எளிதான பஞ்சு போன்ற கோதுமை மாவு அப்பம் எப்படி தயாரிப்பது? என்பதை பார்ப்போம்.

கோதுமை அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – இரண்டு பத்தை, ஏலக்காய் – 3, சர்க்கரை – முக்கால் கப், ரவை – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், உப்பு – கால் ஸ்பூன், சோடா உப்பு – 2 சிட்டிகை, வாழைப்பழம் – ஒன்று.

- Advertisement -

கோதுமை அப்பம் செய்முறை விளக்கம்:
கோதுமை அப்பம் செய்வதற்கு முதலில் 2 பத்தை அளவிற்கு தேங்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நல்ல வாசத்திற்கு 3 ஏலக்காய்களை சேர்த்து கொள்ளுங்கள். ரவை அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். ரவை வறுத்த ரவை அல்லது வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் இனிப்பு சுவைக்கு முக்கால் கப் அளவிற்கு சர்க்கரையை சேர்த்துக் கொள்வது நல்லது. சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்தால் இன்னும் ஆரோக்கியம் பலப்படும். பின்னர் மிக்ஸியை இயக்கி கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை மிகவும் நைசாக அரைத்து விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். இவற்றுடன் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்து கலந்து விடுங்கள். கால் ஸ்பூன் அளவுக்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். சுவையை தூக்கலாக காட்டிக் கொடுக்கும். பின்னர் இவற்றுடன் ஒரு கனிந்த வாழைப்பழம் ஒன்றை துண்டுகளாக்கி சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து இட்லிக்கு மாவு ஊற்றும் பதத்திற்கு தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அரை மணி நேரம் இவை நன்கு ஊற வேண்டும். அப்போது தான் ரவை எல்லாம் ஊறி நன்கு பஞ்சு போல அப்பம் உங்களுக்கு கிடைக்கும். அரை மணி நேரத்திற்கு பிறகு இரண்டு சிட்டிகை அளவிற்கு சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அப்போது தான் அப்பம் உப்பலாக வரும். சிறு குழந்தைகளுக்கு கொடுக்க இருக்கிறீர்கள் என்றால் சோடா உப்பு சேர்க்க தேவையில்லை. அப்படியே சுட்டு எடுக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெயை விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் கொதித்து வரும் பொழுது அடுப்பை மீடியமாக வைத்து கொள்ளுங்கள்.

குறைந்த தீயில் வைத்தால் அப்பம் வேக நேரமெடுக்கும். அதிக தீயில் வைத்தால் அப்பம் கருகி விட வாய்ப்புகள் உண்டு. எனவே மிதமான தீயில் வைத்தால் உள்ளேயும், வெளியேயும் சரியான பதத்தில் வெந்து வரும். மிதமான தீயில் வைத்துக் கொதிக்கும் எண்ணெயில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றுங்கள். அதே போல எல்லா மாவையும் ஊற்றி 2 நிமிடம் அப்படியே காத்திருங்கள். மேலே ஒருபுறம் வெந்து மிதக்க ஆரம்பிக்கும். அதன் பிறகு நீங்கள் திருப்பி போட்டு இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுத்தால் சுவையான பஞ்சு போன்ற கோதுமை மாவு அப்பம் ரொம்பவே சுலபமாக தயார். இது பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கூட ரொம்பவே பிடித்தமான ஒரு பாரம்பரிய டிஷ்ஷாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -