உங்க வீட்ல கோதுமை மாவு இருக்குதா? சூப்பரான அல்வா! பத்து நிமிஷத்துல சட்டுனு செஞ்சிடலாம்!

gothumai-halwa1
- Advertisement -

அல்வா என்று சொன்னாலே கட்டாயம் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் நெய் சொட்ட சொட்ட அல்வாவை, நம் கையாலேயே செய்து சாப்பிட்டால், அதன் சுவையும் மணமும் கட்டாயம் இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் எல்லோரது மனதிலும் இடம் பிடிக்க ஒரு முறை இந்த அல்வாவை செய்து தான் பாருங்களேன்! செய்யும் போதே நாக்கில் எச்சி ஊறும் கோதுமை அல்வா எப்படி செய்வது பார்த்து விடலாமா?

gothumai-halwa

கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப், தண்ணீர் – 2 கப், தேவையான அளவு முந்திரிப்பருப்பு சிறிதாக உடைத்தது.

- Advertisement -

Step 1:
அல்வாவை செய்ய தொடங்குவதற்கு முன்பு, 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் கொதிக்க விட்டு விடுங்கள். அதன் பின்பு, ஒரு சிறிய தாளிப்பு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு, சர்க்கரை போட்டு, அதில் ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, அதை பாகு காய்ச்ச விடுங்கள். சர்க்கரை சிவப்பு நிறத்திற்கு வந்தவுடன், அல்வாவில் சேர்க்க போகின்றோம். செயற்கை கலர் பொடிக்கு பதிலாக இந்த சர்க்கரை கரைசலை பயன்படுத்தலாம்.

sugar-syrap

Step 2:
எதில் கோதுமை மாவை அளந்து எடுக்கிறீர்களோ, அதே ஆழாகில் சர்க்கரையையும், நெய்யையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அளவு மாறினால் பக்குவம் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அடுப்பில் கடாயை வைத்து, 1/2 கப் அளவு நெய் ஊற்றி, அந்த நெய், வெதுவெதுப்பாக சூடு ஆனதும், எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவை, நெய்யில் கொட்டி, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, கோதுமை மாவை கைவிடாமல் 3 நிமிடங்கள் வரை கலக்க வேண்டும்.

- Advertisement -

அதாவது அந்த நெய்யில் கோதுமை மாவு நன்றாக வறுபட்டு வரவேண்டும். 3 நிமிடம் மாவு நன்றாக வறுபட்ட பின்பு, முதலில் பாதி அளவு, சூடு தண்ணீரை, கடாயில் உள்ள மாவோடு ஊற்றி, மாவை நன்றாக கலக்கி விடுங்கள். 30 விநாடிகள் நன்றாக கிளறி பின்பு மீதமிருக்கும் ஒரு டம்ளர் தண்ணீரையும் சேர்த்து மாவை நன்றாக கிண்டி விடுங்கள். (புரிகிறதா? வறுபட்டு கொண்டிருக்கும் மாவில் சுடு தண்ணீரை ஒரேயடியாக ஊற்றாமல், கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு முறை ஊற்றிக் கிளற வேண்டும். கோதுமைமாவு நன்றாக வெந்து, சுருண்டு கடாயில், கரண்டியிலும் ஒட்டாமல் வரும்.)

halwa

கட்டாயம் இரண்டு டம்ளர் சுடு தண்ணீரையும் மாவோடு சேர்த்து கிளறி விட வேண்டும். சுடு தண்ணீர் ஊற்றிய மாவை 7 நிமிடங்கள் வரை கிளறி விட்டால் போதும். இந்த சமயத்தில், இப்போது, காய்ச்சி வைத்திருக்கும் 2 டேபிள்ஸ்பூன் அளவு சர்க்கரை பாகை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அல்வாவிற்கு, தேவையான வண்ணம் கிடைத்துவிடும்.

- Advertisement -

halwa-stage

வண்ணத்திற்காக, பாகு கரைசலை சேர்த்தவுடன், ஒருமுறை நன்றாக கிளறி விட்ட பின்பு, சர்க்கரையை சேர்த்து மாவை நன்றாக கிளற தொடங்குங்கள். சர்க்கரை உருகி, மாவோடு கலந்து கொஞ்சம் இலகிய தன்மைக்கு வரும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க, சர்க்கரையை சேர்த்த பின்பு மொத்தமாக மூன்று நிமிடங்களில், அல்வாவிலிருந்து நெய் தனியாக பிரிந்து வரும். தளதளவென்று அல்வா பக்குவத்தை பார்த்தவுடனே நமக்கு தெரியும். இறுதியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில், முந்திரி பருப்பை வறுத்து, அல்வாவில் சேர்த்து விட்டீர்கள் என்றால், சுவையான வாசனையான அல்வா தயார். சொல்லும் போதே எச்சில் ஊறுகிறது அல்லவா? ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்!

இதையும் படிக்கலாமே
வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவுமே இல்லாமல் சட்னி அரைக்க முடியுமா? இந்த சட்னி செஞ்சு பாருங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -