படிப்பிற்காகவோ அல்லது வேலை நிமிர்த்தமாகவோ வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலரும் முயற்சி செய்வார்கள். பலருக்கும் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கும். அப்படி முயற்சி செய்யும்பொழுது அவர்களுக்கு வெளிநாட்டு யோகம் இருந்தால் மட்டுமே தான் அந்த முயற்சிகள் வெற்றி அடையும். அப்படி யோகம் இல்லாத பட்சத்தில் அவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் வெற்றி என்பது ஏற்படாது.
அதோடு மட்டுமல்லாமல் ஒரு சிலர் வெளிநாடு சென்றாலும் எதற்காக சென்றார்களோ அது நடைபெறாமலேயே திரும்பி வந்து விடுவார்கள். இப்படிப்பட்ட பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்களும், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்களும் வீர ஆஞ்சநேயரை வழிபடும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆஞ்சநேயர் வழிபாடு
நவகிரகங்களால் ஏற்படக்கூடிய யோகங்களில் ஒன்றுதான் வெளிநாடு செல்லும் யோகம். யார் ஒருவருக்கு இந்த வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதோ அவர்களால் மட்டும் தான் வெளிநாட்டிற்கு செல்ல முடியும். படிப்பு விஷயத்திற்காகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ வேறு ஏதாவது காரணத்திற்காகவோ வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் பலர் இருந்தாலும் ஒரு சிலரால் மட்டுமே வெளிநாட்டிற்கு செல்ல முடிகிறது. இதற்கு அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் காரணமாக இருக்கும் பட்சத்தில் வீர ஆஞ்சநேயரை வழிபட்டு அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய முடியும்.
இந்த வழிபாட்டை நாம் வியாழக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். வீர ஆஞ்சநேயர் சுயம்புவாக வீற்றிருக்க கூடிய கோவில் புதுப்பாக்கம் என்னும் ஊரில் இருக்கிறது. இது வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் இருக்கக்கூடிய கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு வியாழக்கிழமை அன்று செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது அவருக்கு வெற்றிலை மாலை சாற்ற வேண்டும். அதேபோல் வெண்ணையை அவருக்கு சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு உங்களுக்கு வெளிநாடு செல்வதில் என்ன பிரச்சனை இருக்கிறதோ அந்த பிரச்சினையை முழுமனதோடு ஆஞ்சநேயரிடம் கூற வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 21 வாரங்கள் இந்த கோவிலுக்கு சென்று இங்கு இருக்கக் கூடிய வீர ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும் பொழுது ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷங்கள் நிவர்த்தியாகி வெளிநாடு செல்வதற்குரிய யோகமும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
வெளிநாடு செல்லும் யோகம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் வீர ஆஞ்சநேயரை தான் வழிபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வாரங்கள் நிறைவடைந்த பிறகு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்து அந்த வடையை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:காமதேனுவை வீட்டில் வைக்கும் முறை
பல அற்புத சக்தி மிகுந்த ஆஞ்சநேயர் சுயம்பு ரூபத்தில் தோன்றி இருக்கும் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுபவர்களுக்கு விரைவிலேயே வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.