தங்க நகை மற்றும் வெள்ளி பாத்திரங்களை புதிது போல் சுத்தம் செய்ய வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே! எதற்கு காசை வீணாக்க வேண்டும்?

gold-silver-viboothi
- Advertisement -

நம்மிடம் இருக்கும் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ரசாயனம் எதுவும் இல்லாமல் காசு கொடுத்து கடைகளுக்கு சென்று பாலிஷ் போடாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம். தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? என்பதை பொறுத்து தான் அது நம்மிடம் மென்மேலும் பெருகும் என்பார்கள். அப்படிப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை எளிய முறையில் சுத்தம் செய்யும் முறையை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

தங்க நகைகளை எப்பொழுதும் கண்ட இடங்களில் போட்டு வைக்கக்கூடாது. எங்கே வைத்தோம் என்று தேடிக் கொண்டிருக்க கூடாது. அதுபோல் முதல் முறை வாங்கி பெரியவர்கள் அணியும் முன்பு மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து சிறிய குழந்தைகளுக்கு அணிவித்து அதன்பின் பெரியவர்கள் அணிந்து கொள்வது மரபு. இப்படி எல்லாம் பராமரித்து வரும் பொழுது தான் தங்கம் மென்மேலும் நம்மிடம் சேரும் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.

- Advertisement -

தங்க நகைகள் பளிச்சென்று பாலிஷ் போட்டது போல மாற கொஞ்சம் மஞ்சள் தூளுடன் சேர்த்து தண்ணீர் கலந்து கெட்டியாக கரைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு மணி நேரமாவது தங்க நகைகளை போட்டு நன்றாக ஊற விட்டு விடுங்கள். அதன் பின் எடுத்து உங்கள் டூத் பேஸ்ட்டை கொஞ்சம் பயன்படுத்தி தேய்த்தால் போதும் நுண்ணிய துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகள் கூட நீங்கி பளபளவென்று புதிதாக வாங்கிய நகைகள் போல பளிச்சென்று மின்னும்.

manjal

ஒன்றிரண்டு முறை டூத்பேஸ்ட் பயன்படுத்தி தேய்த்து விட்டு பின்னர் நல்ல தண்ணீரில் அலசி எடுங்கள். மாதம் ஒரு முறையாவது உங்கள் தங்க நகைகளை இதுபோல் செய்து வர நீங்கள் வெளியில் காசு கொடுத்து பாலிஷ் போட வேண்டிய அவசியமே இல்லாமல் போகும். இதே போல வெள்ளி பாத்திரங்களை பளபளவென்று மின்னும் வைக்க நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விபூதியே போதுமானது.

- Advertisement -

வெள்ளி பாத்திரத்தின் மீது தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அப்படியே கொஞ்சம் விபூதியை கைகளில் எடுத்து வெள்ளி டம்ளர், வெள்ளி நகைகளில் லேசாக அழுத்தி தேய்த்தால் போதும். வெள்ளியில் சேர்ந்து இருக்கும் அழுக்குகள் கருப்பாக விபூதியில் படிந்து விபூதி கருப்பாக மாறும். வெள்ளியில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். உடனே தண்ணீர் போட்டு கழுவாமல் ஈர துணி கொண்டு துடைத்து வையுங்கள். ஒரு ஐந்து நிமிடம் கழித்து நல்ல தண்ணீரில் அலசினால் வெள்ளி பொருட்கள் பளிச்சென மின்னும், அதன் பிறகு நன்கு காய்ந்த துணியை கொண்டு உடனே துடைத்து எடுத்து விடுங்கள்.

viboothi

பெரிய பெரிய வெள்ளி பாத்திரங்களை இப்படி செய்யும் பொழுது புத்தம் புதிதாக அப்படியே நீண்ட நாட்களுக்கு இருக்கும். நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளி பொருட்கள் சுத்தம் செய்ய டூத் பவுடரை பயன்படுத்தலாம். டூத் பவுடர் கொண்டு தேய்க்கும் பொழுது வெள்ளி தேய்மானம் ஏற்படாமல் வெள்ளியில் இருக்கும் அழுக்குகள் மட்டும் தனியாக பிரிந்து வரும். புத்தம் புதிதாக வாங்கிய வெள்ளி கொலுசு, வெள்ளி நகைகளை போல பார்ப்பதற்கு ஆச்சரியப்படும் வகையில் நல்ல பலனைக் கொடுக்கும். எனவே காசு வீணாக்காமல் உங்கள் வீட்டிலேயே இந்த முறையில் வெள்ளை மற்றும் தங்க பொருட்களை சுத்தம் செய்து பராமரித்து வந்தால் உத்தமம்.

- Advertisement -