இன்று எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் தங்கம் அதிகம் சேரும்

gold

மங்கலங்கள் பலவற்றை மக்களுக்கு ஏற்படுத்தும் ஒரு தினமாக அட்சய திருதியை தினம் வருகிறது. இந்த அட்சய திருதியை தினத்தில் செய்யப்படுகின்ற எந்த ஒரு நற்காரியத்தின் பலனும் பன்மடங்கு பெருகி நம்மிடமே திரும்பி வந்து சேரும் என்பது ஐதீகம். எனவே தான் இந்த அட்சய திருதியை அன்று பெரும்பாலான மக்கள் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அட்சய திருதியை தினமான இன்று தங்கம் வாங்குவதற்கான சிறந்த நேரங்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Today Gold rate

தின பஞ்சாங்கத்தின்படி நாளைய தினம் நல்ல நேரமாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரையும் இருக்கிறது. இந்த சுப முகூர்த்த நேரங்களில் தங்களின் வருங்கால சேமிப்பாக தங்கம் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். கௌரி நல்ல நேரமாக பகல் 11.15 மணி முதல் நண்பகல் 12.00 வரையும், மாலை 7.30 முதல் இரவு 8.30 மணி வரையும் இருக்கும் காலத்தில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கலாம்.

தங்க உலோகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் கிரகமாக குரு பகவான் இருக்கிறார். எனவே இன்றைய அட்சய திருதியை தினத்தில் குருபகவானுக்குரிய குரு ஹோரை நேரமான நண்பகல் 12.00 லிருந்து 1.00 மணி வரையிலும், மாலை 7.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரையிலும் தங்க நகைகள் வாங்கலாம். இந்த குரு ஹோரை நேரத்தில் தங்கம் வாங்குவதால் தங்கத்தின் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே செல்லும்.

Today Gold rate

சுகமான வாழ்வுக்கும், சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் சுக்கிர பகவானின் அருட்கடாட்சம் நமக்கு தேவையாக இருக்கிறது. மேலும் சுக்கிர பகவான் திருமால் மற்றும் மகாலட்சுமியின் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே அட்சய திருதியை தினத்தில் சுக்கிர பகவானுக்குரிய அதிர்ஷ்ட நேரமான மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையான நேரத்தில் தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை வாங்கினால் உங்களுக்கு இத்தகைய ஆபரண பொருட்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரிக்கும். மகாலட்சுமியின் அருள் கிடைத்து பொருளாதார வளர்ச்சியும், சுக வாழ்வு அமையும்.

இதையும் படிக்கலாமே:
கடக ராசியினர் அதிகம் செல்வம் சேர்க்க பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Gold buying time in Tamil. It is also called as Akshaya thiruthiyai in Tamil or Thangam vanga nalla neram in Tamil or Thangam vanga ugandha naal in Tamil.