அழுக்குப் படிந்த, தினம்தோறும் அணிந்து கொண்டிருக்கும் பழைய தங்க நகைகளை கூட, 20 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம். இந்த 2 பொருளை வைத்து சுத்தம் செய்தாலே போதும்.

gold1

வெளியில் போட்டு செல்வதற்காக வைத்திருக்கும் தங்க நகைகள் அவ்வளவு சீக்கிரத்தில் கருத்துப் போகாது. ஆனால், தினந்தோறும் நம்முடைய வீட்டில் அணிந்து கொண்டிருக்கும் செயின், மோதிரம், கம்மல் போன்ற நகைகள் சீக்கிரமே கருத்து போவதற்கு வாய்ப்புள்ளது. அடிக்கடி இந்த தங்க நகைகளைக் கொடுத்து பாலிஷ் போட முடியாது. ஏனென்றால் பாலிஷ் போட்டால் ஒரு முறை பாலிஷ் போடும் போது நமக்கு கட்டாயம் ஒரு குண்டுமணி தங்கம் ஆவது சேதாரம் ஏற்படும். அது நமக்கு நஷ்டம் தான். சரி இந்த நகைகளை எப்படி தான் பளபளப்பாக மாற்றுவது. இதில் இருக்கும் அழுக்குகளை நீக்க என்ன வழி. சின்ன வீட்டு குறிப்பு உங்களுக்காக மட்டும்.

turmeric

கை பொறுக்கும் அளவு சூடாக இருக்கும், தண்ணீரை ஒரு சிறிய பௌலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள், கோல்கேட் பவுடரை 1 ஸ்பூன் சேர்த்து கொள்ள வேண்டும். கோல்கேட் பவுடர் இல்லாத பட்சத்தில் பேஸ்ட் பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தவரை கோல்கேட் பவுடரை மளிகை கடைகளில் கிடைக்கின்றது வாங்கிப் பயன்படுத்துவது சிறப்பானது.

சூடாக இருக்கும் அந்த தண்ணீரில் மஞ்சள் தூளையும் கோல்கேட் பவுடரையும் போட்டு நன்றாக கலந்து, தங்க நகைகளை சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து, நகைகளை வெளியே எடுத்து பல் தேய்க்கும் பிரஷில் கோல்கேட் பல்பொடி தொட்டு நகைகளை நன்றாக தேய்த்து, அழுக்குகளை நீக்க வேண்டும். வேகமாக அழுத்தம் கொடுத்து தேய்க்க கூடாது. நகைகள் சேதமாகும். பக்குவமாக தேய்க்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

toothpowder1

இவ்வாறு அழுக்கு நீக்கிய தங்க நகைகளை நான்கு அல்லது ஐந்து முறை நல்ல தண்ணீரில் அலசி எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். டேப்பை கொஞ்சம் வேகமாக திறந்து வைத்து, ஃபோர்ஸாக வரும் தண்ணீரில், முடிந்தால் கழுவுவது சிறந்த வழி. உப்புத்தண்ணீர் பயன்படுத்தக் கூடாது இந்த குறிப்புக்கு என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் இந்த நகையை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்திய மஞ்சளும், பல் பொடியும் எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய தங்க நகைகளில் போய் தங்கி விடக் கூடாது. அந்த அளவிற்கு நன்றாக தண்ணீரில் அலச வேண்டும்.

நிச்சயமாக உங்களுடைய தங்க நகையில் இருக்கும் அழுக்கு அத்தனையும் சுலபமாக நீங்கி இருக்கும். பாலிஷ் போட்ட நகை அளவிற்கு பளபளப்பு கிடைக்கவில்லை என்றாலும், கட்டாயம் 80% உங்களுடைய தங்கநகை புதியதாக மாறியிருக்கும். இந்த குறிப்பை உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

covering-jwells3

எக்காரணத்தைக் கொண்டும் அடுப்பில் தண்ணீரை வைத்து விட்டு, அதை கொதிக்க வைத்து அப்படியே கொதிக்கிற தண்ணீரில் தங்க நகைகளை போட்டு கொதிக்க வைக்கக் கூடாது. சீக்கிரமே நகைகள் சேதாரமாகி விடும். அதேபோல் அடிக்கடி தங்க நகைகளை கடையில் கொடுத்து பாலிஷ் போடும் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாதீர்கள். அது நமக்கு நஷ்டத்தை உண்டாக்கிவிடும். உங்களுக்கு பிடித்திருந்தால் நேரம் கிடைக்கும்போது ஒரு சிறிய தங்க நகைக்கு மட்டும், இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.