தங்க பஸ்பம் சாப்பிட்டது மாதிரி உங்களுடைய முகம் தகதகன்னு மின்னும். இந்த பேக் 10 நாட்கள் போட்டுப் பாருங்க. கோல்டன் பேஷியலே தோற்றுப் போகும்.

face6
- Advertisement -

முகம் தங்கம் போல ஜொலிக்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து கோல்டன் பேசியல் தான் செய்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. அது இன்ஸ்டன்டாக கிடைக்கக்கூடிய பளபளப்பு தான். ஒரு சில நாட்களில் அது நம் சருமத்தை விட்டு சென்றுவிடும். நிரந்தரமாகவே சருமம் தங்கம் போல ஜொலிக்க வேண்டும் என்றால் பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றினாலே போதும். இயற்கையான முறையில் உங்களுக்கு இந்த கோல்டன் க்ளோ கூடிய சீக்கிரத்தில் கிடைத்துவிடும்.

குறிப்பு 1:
15 லிருந்து 20 பாதாம் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பாதாமை ஒரு கண்டெய்னரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் பாதாம் பவுடர், அதை கலைக்க தேவையான அளவு சுத்தமான தேன், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு கலந்து இந்த பேக்கை முகம் முழுவதும் தடவி விட வேண்டும். கழுத்துக்கும் போட்டுக் கொள்ளுங்கள். லேசாக மசாஜ் செய்துவிட்டு 10 லிருந்து 15 நிமிடம் பேக்கை முகத்தில் அப்படியே காய விட்டு விடுங்கள். அதன் பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு காய்ச்சிய அல்லது காய்சாத பாலை கொண்டு முகத்தை மசாஜ் செய்து அப்படியே விட்டு விட வேண்டும். 1 மணி நேரம் கழித்து கூட முகத்தை கழுவிக் கொள்ளலாம். தினமும் இந்த பேக்கை போட்டு வந்தால் 20 நாளில் முகம் தங்கம் போல ஜொலிக்கும். (தினமும் இந்த பேக்கை போடுவதன் மூலம் எந்த பக்க விளைவுகளும் வராது.)

இதோடு இன்னும் கூடுதல் சிறப்பு பெற இந்த பாதாம் பவுடர், தேனுடன் 2 சொட்டு எலுமிச்சை பழச்சாறு சேர்க்கலாம். சில பேருக்கு எலுமிச்சை சாறு அலர்ஜியை கொடுக்கும். அலர்ஜியை கொடுப்பவர்கள் எலுமிச்சை சாறு சேர்க்காமல் இந்த பேக் ட்ரை பண்ணலாம். எலுமிச்சை பழச்சாறு அலர்ஜியை கொடுக்காது என்பவர்கள் அதை சேர்த்து முயற்சி செய்து பாருங்கள். இன்னும் கூடுதல் அழகை பெற முடியும்.

- Advertisement -

குறிப்பு 2:
சிவப்பு சந்தனம் 1 ஸ்பூன், தயிர் 1 டேபிள் ஸ்பூன், விட்டமின் ஈ ஆயில் உள்ளே இருக்கும் ஜெல் 1, இந்த மூன்று பொருட்களையும் போட்டு ஒன்றாக கலக்க வேண்டும். இது நமக்கு ஒரு பேக் போல கிடைக்கும். தண்ணீர் ஊற்றக்கூடாது. தேவையான அளவு தயிர் ஊற்றி தான் கலக்க வேண்டும். தயிர் அலர்ஜி என்பவர்கள் ரோஸ் வாட்டர் அல்லது பால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்துவிட்டு, 20 நிமிடங்கள் காய வைத்து விட்டு மீண்டும் முகத்தை ஈரம் செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவினால் உடனடியாக ஒரு கோல்டன் க்ளோ கிடைக்கும். இதை வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து போடலாம்.

குறிப்பு 3:
ஒரு சின்ன பவுல் எடுத்துக்கோங்க. அதுல ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 2 உள்ளே இருக்கும் ஜெல், 2 சிட்டிகை – கஸ்தூரி மஞ்சள், 1/4 ஸ்பூன் காபி பவுடர், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கலந்து விடுங்கள். இதோடு இறுதியாக வெள்ளை நிறத்தில் இருக்கும் கடையில் வாங்கிய ஆலோவேரா ஜெல் 1 டேபிள் ஸ்பூன் போட்டு, நன்றாக அடித்து கலக்கினால் பள பளன்னு கோல்டன் கலரில் ஒரு பேக் கிடைத்திருக்கும்.

இதை மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வச்சுக்கோங்க தினமும் ராத்திரி தூங்கும் போது இதை மிகக் குறைந்த அளவு எடுத்து உங்களுடைய முகத்தில் சீரம் போல அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள். 10 நாட்களில் முகம் இந்த கிரீம் போலவே தகதகன்னு சருமம் மின்னும் பார்த்துக்கோங்க. ‌முகம் முழுவதும் சீராக ஒரே கலராக மாறிவிடும். அங்கங்கே இருக்கும் கருப்பு நிறமெல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும். கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையத்திலும் இதை பூசலாம். இந்த ஜெல்லை தினமும் பயன்படுத்தி வரலாம்.

- Advertisement -