அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் செங்காலி மாலை

sengali malai
- Advertisement -

இப்போது கருங்காலி மாலை தொழிலதிபர்கள் சினிமா பிரபலங்கள் அனைவரும் அணிய தொடங்கிய பிறகு அனைவராலும் பெருமளவு பேசப்பட்டு அதிகமாக விற்பனையும் அதிகரித்து உள்ளது. கருங்காலி மாலைக்கு உள்ளது போல இந்த செங்காலி மாலைக்கும் ஆன்மீக சக்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மாலையை யாரெல்லாம் அணியலாம் என்ற தகவலை இப்போது ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செங்காலி மாலை அணிய வேண்டிய ராசிகள்

இந்த செங்காளி மாலையானது முருகப்பெருமானுக்கும் பைரவருக்கும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதிர்ஷ்டத்தை ஈர்க்கக் கூடிய சக்தி இந்த செங்காலி மாலைக்கு உள்ளது. செங்காலி மரத்தை வீட்டில் நட்டால் தீய சக்திகள் எதுவும் அண்டாது என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

அது மட்டும் இன்றி கோவில்களின் கட்டுமான பணிக்கு இந்த செங்காளி மாலையை பயன்படுத்துவார்கள். கருங்காலி மரத்தினை போல செங்காலி மரத்திற்கும் பல கூடுதல் குணங்கள் உண்டு அதுமட்டுமின்றி இதற்கு தெய்வீக ஆற்றலும் உண்டு. தேக்கு மரத்தை விட அதிக வலிமையானதும் சக்தி வாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக இந்த செங்காளி மாலையானது பிரபஞ்சத்தில் இருக்கும் நல்ல சக்திகளை ஈர்த்து நமக்கு கொடுக்கும் இதனால் இந்த மாலையை அணிந்திருப்பவர்களுக்கு அதிர்ஷ்டங்களை ஈர்த்துக் கொடுக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு என்று ஜோதிட நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆகையால் இந்த மாலை அணிபவர்களிடமும் தெய்வ ஆற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

முன்பெல்லாம் இந்த செங்காலியில் கட்டில் தொட்டில் போன்றவற்றை செய்தார்கள். இதனால் வீட்டில் தோஷம் தாங்காது. குழந்தைகள் நல்ல முறையில் வளர்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. தற்போது இதையெல்லாம் செய்ய முடியாது போனாலும் செங்காலியில் மாலை அல்லது கையில் காப்பு போன்றவற்றை அணியலாம் என்று சொல்லப்படுகிறது அதிலும் சில ராசிகள் இதை அணியும் பொழுது நல்ல பலனை பெறுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

முருகப்பெருமானுக்கும் பைரவருக்கும் உகந்ததாக சொல்லப்படும் இந்த செங்காலி மாலையில் செவ்வாய் பகவானை ராசியின் அதிபதியாகக் கொண்டவர்கள் அணிந்து கொள்ளலாம். அதாவது மேஷம், விருச்சகம் ராசிக்காரர்களும் கிருத்திகை விசாகம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த செங்காலி மாலை அணிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த மாலையை அணிந்திருக்கும் பொழுது காரிய சித்தி ஆகும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் சுபகாரிய தடை நீக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வண்டி வாகனங்களில் இந்த மாலையை தொங்க விட்டால் விபத்து போன்றவற்றிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: நவபஞ்ச ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

இதை காப்பாக அணிந்து கொள்வதென்றால் ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் அணிந்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடும் நேரங்களில் எந்த மாலையை கழற்றி வைத்து விட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த செங்காளி மாலை நம்முடன் இருந்தால் இதன் பூரண சக்தி நம்முடைய தலைமுறையே காக்கும். இதில் உள்ள ஆற்றல் மந்திரங்களை கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மைகளை பல்வேறு நன்மைகளை பெறலாம்.

- Advertisement -