நவபஞ்ச ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் பார்வையை பொறுத்தே மனித வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வதாக கணிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு ராசியில் சூரியன் இருக்கும் பொழுது மற்றொரு கிரகங்களுக்கும் இணையும் போது இந்த நவபஞ்ச ராஜயோகம் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக கருதப்படுகிறது.

அந்த வகையில் டிசம்பர் 31 அன்று தற்போது மேஷ ராசியில் இருக்கும் வியாழன் தனுசு ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த ராசியில் ஏற்கனவே சூரியனும் இருப்பதால் நவபஞ்ச ராஜயோகம் உருவாக இருக்கிறது. இந்த நிகழ்வால் 12 ராசிகளுக்கும் பலவிதமான மாற்றங்கள் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்பட கூடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷம்

இந்த ராசியினருக்கு வியாழ கிரகத்தின் இந்த பெயர்ச்சியால் பல நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன் அதிக லாபமும் கிடைக்கும். சிறு சிறு தொழில்கள் தொடங்க நினைத்தவர்கள் கூட இப்பொழுது அதை ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும் பணியிடத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றிகள் கிட்டும். பண வரவில் தடை இருக்காது.

கடகம்

இந்த ராசிக்காரர்களுக்கு வியாழனின் இந்த சஞ்சாரத்தால் ஆண்டின் துவக்கத்திலே நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாக போகிறது. இதுவரை தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் கூட உங்களிடம் சரண் அடைந்து விடுவார்கள். வண்டி வாகனம் வாங்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் உருவாகும். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் நீங்கி நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவிற்கு குறைவிருக்காது.

- Advertisement -

விருச்சகம்

இந்த ராசிக்காரர்களுக்கு வியாழனின் இந்த சஞ்சாரத்தால் 2024ஆம் ஆண்டு முழுவதுமே மங்களகரமான ஆண்டாக நிகழும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த வருடம் முழுவதும் சுப செய்திகள் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உருவாகும். இதனால் லாபம் அதிகரிக்கும் இல்லற வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் பண வரவு தாராளமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிப்படி பூஜை அறையில் எந்த பொருளை வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின்படி கிரகங்களின் மாற்றத்தால் உருவாகும் நவபஞ்ச ராஜ யோகத்தினால் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிகளை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தப் பலன் ஜோதிடத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அவரவருடைய கிரக சூழ்நிலைக்கு ஏற்ப இதில் மாற்றங்களும் நிகழலாம்.

- Advertisement -