சிவராஜ யோகத்தால் ஆளும் யோகம் யாருக்கு

sivan astrology
- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, உச்சம், நீசம், ஆட்சி உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் ராஜ யோகம், கஜகேசரி யோகம் , பாக்கிய யோகம், விபரீத ராஜயோகம், போன்ற யோகங்கள் உருவாகும்.

இந்த யோகங்களில் சிவராஜ யோகம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்ற பொருள் உண்டு. ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவான் குரு பகவானை பார்ப்பதால் சிவராஜ் யோகம் உண்டாவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது.

- Advertisement -

அது மட்டும் இன்றி இந்த இரு கிரகங்கள் இணைந்து இருந்தாலும் இந்த யோகம் உருவாகும். இவை அனைத்திலும் விட மேலான சிவம் இந்த யோகத்தில் அமைந்துள்ளதாலே இது அதீத பலன்களை தரக்கூடியதாக அமைந்துள்ளது.

சிவராஜ யோகத்தின் பலன்கள்

ஜாதகத்தில் குரு பகவான் சூரிய பகவானும் இணைந்து அல்லது சமசப்தமாக அமர்ந்திருந்தாலும் உருவாவது தான் இந்த சிவராஜ யோகம். குரு பகவான் சமபந்தம் பெரும் இந்த யோகங்கள் எந்த ஜாதகத்தில் அமைந்திருந்தாலும் அரசாங்கம் மூலம் திடீர் அதிர்ஷ்டம் ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் நல்ல தேர்ச்சி உருவாக்கும். வீடு மனை வாங்குவதில் இருந்து சொத்துக்களை குவிக்கும் யோகம் போன்றவை கிடைக்கும்.

- Advertisement -

பொதுவாகவே ஒரு ராசியில் குரு பகவான் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு பொன் பொருள் சேர்க்கையோடு புகழோடு சமுதாயத்தில் அந்தஸ்துடன் வாழக் கூடிய சூழ்நிலை உருவாகும். அந்த வகையில் குரு பகவானுடன் சூரிய பகவான் இணைந்து உருவாகக் கூடிய இந்த சிவராஜ யோகம் ஆனது அதீத பலன்களை தருவதாக அமையும்.

இந்த யோகம் அமைய பெற்றவர்கள் அரசியல் முதல் பல்வேறு துறைகளில் ஆளும் வர்க்கத்தின் இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி ஒரு சாதாரண தொழிலில் இவர்கள் சேர்ந்தாலும் கூட அதில் தலைமை பொறுப்பு ஏற்று சிறப்பாக பணியாற்றி கூடிய ஆற்றலை பெறுவார்கள். விரைவில் தலைமை பொறுப்பே இவர்களை தேடி வந்து விடும்.

- Advertisement -

பெரும்பாலும் இத்தகைய யோகம் வாய்க்கப் பெற்றவர்கள் அறிவு சார் ரீதியாகவும் சிறந்த தலைவர்களாகவும் இருப்பார்கள். அரசியல்வாதி அறிஞர்கள் ஆசிரியர்கள் என தலைமை பண்பு வகிக்கக் கூடிய பதவிகளிலே இருப்பார்கள. இவர்களை தேடி செல்வம் புகழ் அனைத்தும் வந்து குவியும்.

இதையும் படிக்கலாமே: ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டைக்குப் பிறகு, 12 ராசிக்கும் ராசிபலன்

இத்தகைய யோகம் அமையப் பெற்றவர்கள் அனைவருமே சிவராஜ யோகம் கிடைக்கப் பெற்றவர்கள் தான். ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகங்களின் நகரவுமே இது போன்ற யோகங்களையும் பலன்களையும் மாறி மாறி வழங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் சிவராஜ யோகம் யாருக்கெல்லாம் அமைய பெற்று இருக்கும் என்று இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -