வாஸ்து பிரச்சனையை தீர்க்கவல்ல மாவிலை.

0
328
- விளம்பரம் -

வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுபகாரியங்கள் ஆகட்டும் இல்லை கோவில் திருவிழாவாகட்டும் மாவிலை தோரணம் இல்லாத ஒரு விழாவை பார்க்கவே முடியாது. எதற்காக மாவிலைக்கு இவளவு முக்கியத்துவம் தருகிறோம்? வாருங்கள் பார்ப்போம்.

பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள்.

Advertisement

பூஜை முடிந்த பின்னர் மாவிலையால் கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர். இப்படி விழாக்களில் மாவிலை முக்கிய இடம் பெறுவதற்கு காரணம் மாவிலையில் லட்சுமி தேவி வசிக்கிறார்.

விசேஷ நாட்களில் வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவதால் தீய சக்திகள் விலகுகிறது. அதோடு மாவிலை தோரணம் உள்ள வீட்டை பார்க்கும் தேவர்கள், அந்த வீட்டிற்குள் நுழைய முடிவு செய்வார்கள். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிஷ்டம் பிறக்கும் அதோடு வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அவற்றை இந்த தோரணம் நீங்க செய்யும்.

மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பும் உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆகையால் அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மாவிலையை நாம் பிளாஸ்டிக்கில் வாங்கி தோரணமாய் கட்டாமல். உண்மையான மாவிலை தோரணத்தை கட்டுவோம். வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்.

Advertisement