- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅரசாங்க வேலை கிடைக்க சூரிய வழிபாடு

அரசாங்க வேலை கிடைக்க சூரிய வழிபாடு

- Advertisement -

பலரும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதிலும் ஒரு சிலரோ அரசாங்கத் துறையில் ஏதாவது ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வார்கள். அரசாங்க வேலைக்குரிய தேர்வுகளுக்காக படித்து அந்த தேர்வுகளை எழுதுவார்கள். இப்படி பலதரப்பட்ட முயற்சிகளில் பலரும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஈடுபட்டு ஒரு சிலரால் நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் ஜாதகத்தில் சூரிய பகவானால் ஏதாவது பாதிப்புகள் உண்டாகி இருக்கலாம் அல்லது கிரகங்களின் சேர்க்கை சரியாக இல்லாமல் இருக்கலாம். இவை அனைத்தையும் சரி செய்து அவர்களுடைய முயற்சிக்குரிய பலனை பெறுவதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அரசாங்க வேலை கிடைக்க வழிபாடு

பொதுவாக அரசாங்க வேலை என்றாலே நம் நினைவிற்கு வரக்கூடியவர் சூரிய பகவான் தான். சூரிய பகவானிற்குரிய கிழமையாக ஞாயிற்றுக்கிழமை திகழ்கிறது. அதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சூரிய பகவானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் அரசாங்கத் துறையில் நல்ல வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி சூரிய பகவானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அவற்றின் சில வழிப்பாட்டு முறைகளை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் சூரிய கோரையான ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய நவக்கிரகங்கள் இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சூரிய பகவானுக்கு முன்பாக 12 தீபங்களை கிழக்கு பார்த்தவாறு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு சூரிய பகவானின் விக்ரகத்திற்கு அவருடைய பாதம் வரை மாலை போடுவது போல் சிவப்பு நிற மலர்களால் மாலை கட்டி சாற்ற வேண்டும். பிறகு 108 முறை அவரை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 12 ஞாயிற்றுக்கிழமைகள் சூரிய பகவானை வழிபாடு செய்யும்பொழுது சூரிய பகவானின் அருளால் அரசாங்க வேலை கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் இருக்கக்கூடிய விஷ்ணு ஆலயத்திற்கு சென்று விஷ்ணு பகவானுக்கு துளசி மாலை அல்லது துளசி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தாலும் சூரிய பகவானின் அருளாலும் விஷ்ணு பகவானின் அருளாலும் விரைவிலேயே அரசாங்க தொடர்பான வேலைகள் அனைத்தும் நல்லவிதமாக நடந்திரும். இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 11 ஞாயிற்றுக்கிழமைகள் செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் சூரிய பகவானுக்குரிய ஆதித்ய ஹிருதயம் என்னும் ஸ்தோத்திரத்தை தினமும் ஒருமுறை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் படிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் நாம் படிக்கும் பொழுது சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

இந்த வழிபாடுகளை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் செய்ய வேண்டும் என்று இல்லை. அரசாங்க ரீதியாக ஏதாவது ஒரு சலுகைகளை பெற வேண்டும் அல்லது உயர் பதவியை அடைய வேண்டும், அதிகாரத்துவத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொருவரும் இந்த வழிபாடுகளில் ஏதாவது ஒரு வழிபாட்டை மட்டும் மேற்கொண்டாலேயே சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சூரிய பகவானின் அருள் கிடைத்தவர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் தான் ராஜாவாக திகழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே:வழிபாடும் வேண்டுதலும் நிறைவேற

சூரிய பகவானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. எப்படி முழு மனதோடு சூரிய பகவானை நாம் வழிபாடு செய்கிறோமோ? அதே போல் முழு மனதோடு அரசாங்க வேலைக்குரிய முயற்சிகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பான முறையில் சூரிய பகவானின் அருளாலும் முயற்சியின் பலனாலும் வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்