அரசு வேலை கிடைக்க இந்த வழிபாட்டை செய்தால் போதும் தெரியுமா ?

Government job Mantra Tamil

கற்றோர்களுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது நமது ஆன்றோர்களின் அனுபவ பழமொழி. மனிதனை மற்ற எல்லாவற்றிலிருந்தும் வேறுபடுத்தி காட்டுவது அவன் கற்ற கல்வியாகும். ஒரு காலத்தில் கல்வி என்பது ஒரு மனிதனின் அறிவாற்றலையும், உயரிய சிந்தனை மற்றும் எண்ணத்தை மேம்படுத்துவதாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் கல்வி கற்பது என்பது வயிற்று பிழைப்பிற்காக தான் என்றாகி விட்டது. மேலும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக போட்டி தேர்வுகளையும் எழுத வேண்டியதிருக்கிறது. இவற்றில் வெற்றிபெறுவதற்கான வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

Government Jobs

மக்கள் தொகை அதிகரிக்கும் போது அனைத்திலும் கடுமையான போட்டிகள் ஏற்படுவது இயற்கையே. அதிலும் குறிப்பாக அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கான போட்டி தேர்வுகளில் ஆயிரக்கணக்கில் இருக்கும் பணியிடங்களுக்காக பல லட்சக்கணக்கான மக்கள் தேர்வு எழுதும் நிலை இருக்கிறது. இங்கே நாம் சில விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் என்ன தான் முயன்றாலும் ஒருவருக்கு அரசு பணி கிடைப்பதற்கு என்று விதியமைப்பு இருக்க வேண்டும். இந்த விதியமைப்பு இல்லாவிட்டால் என்னதான் முயன்று தேர்வுகள் எழுதினாலும் ஒருவருக்கு அரசு பணி கிட்டாது. அது போல ஒருவருக்கு பூர்வபுண்ணிய பலமும், பிறருக்கு தன்னால் இயன்றவரை உதவி நல்வினை பயன்கள் அதிகம் பெற்றவர்களுக்கும் அரசு பணி கிட்டும். அதே நேரத்தில் போட்டிகள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு சில பரிகார முறைகளை நமது ஆன்மீக பெரியோர்கள் கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றி உங்களுக்கு விதியமைப்பு இருக்கும் பட்சத்தில் நீங்களும் அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

Pasu

 

- Advertisement -

உங்கள் வீட்டில் பசுமாடுகளை வளர்த்தாலும் அல்லது அக்கம்பத்தில் பசுமாடுகள் ஏதேனும் வளர்க்கப்பட்டாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் காலையில் பசுமாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக கன்றிட்ட பசுமாடுகளுக்கு வாழை பழங்கள் கொடுத்து வர அப்பசுமாட்டின் உடலில் தங்கியிருப்பதாக கருதப்படும் தேவர்களின் மனம் குளிர்ந்து, உங்களின் பாப செயல்களுக்கான கர்ம வினைகளை நீக்கி உங்களை ஆசிர்வதிக்கின்றனர். இதன் பிறகு நீங்கள் எடுக்கும் எத்தகைய முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி கிட்ட தொடங்கும் எனவும், எந்த ஒரு செயலிலும் இருந்த காரிய தடைகளும் நீங்கும் எனவும் ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

guru sishyan

கல்வி வேள்விகளில் ஒருவர் வெற்றியடையடைய அவருக்கு கல்வி, கலைகளை போதித்த குருவின் ஆசிர்வாதங்களும், நவகிரகங்களில் சுபகிரகமான “குரு” எனப்படும் “வியாழன்” கிரகத்தின் அருளாசியும் அவசியமாகிறது. எனவே தேர்வுகள் போட்டிகள் போன்றவற்றில் பங்கேற்கும் நபர்கள் அதில் ஈடுபடுவதற்கு முன்பாக தங்களுக்கு கல்வி, கலைகளை கற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் குரு போன்றவர்களிடம் ஆசீர்வாதங்களை பெற்று செல்ல வேண்டும். மேலும் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானான வியாழன் விக்கிரகத்திற்கு மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, 27 வெள்ளை கொண்டைக் கடலைகளை மாலையாக சாற்றி வழிபட வேண்டும்.

Guru baghavan

போட்டிகள் மற்றும் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பு உங்கள் குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வழிபடவேண்டும். இந்த தேர்வுகள் தொடங்கும் காலத்திற்கு முன்பிருந்து அத் தேர்வுகளுக்கான முடிவு அறிவிக்கப்படும் காலம் வரை, தினமும் காலையில் சனி பகவானின் வாகனமான காக்கைகளுக்கு மஞ்சள் நிறம் கொண்ட உணவு பொருட்களை கொடுத்து வர வேண்டும். இதனால் மனம் குளிரும் சனிபகவான் நீங்கள் அனைத்திலும் வெற்றி பெற ஆசீர்வதிப்பார்.

இதையும் படிக்கலாமே:
ஏமாற்றியவர்களை உடனடியாக பழி தீர்க்கும் கருப்ப சுவாமி கோவில் பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், பரிகாரங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:’
Here we have valipadu and Pariharam for government job in Tamil. It is also called as Arasu velai kidaikka pariharam in Tamil or Arasu pani kidaikka pariharam.