சனி தோஷம், ராகு, கேது என அனைத்து தோஷங்களும் நீங்க எளிய பரிகாரம்

Navagragham
- Advertisement -

பொதுவாக நமது வாழ்வில் நடக்கும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் நவகிரகங்களே காரணம் என்று கூறப்படுகிறது. சிலரது ஜாதகத்தில் சில நவகிரகங்களின் தோஷம் இருப்பதால் சில சிக்கல்கள் விளைகின்றன. அத்தகைய தோஷங்களை எளிய முறையில் போக்கி வாழ்வில் வளம்பெற செய்யும் எளிய பரிகாரங்கள் இதோ.

navagragha

சூரிய தோஷம் நீங்க பரிகாரம்:

- Advertisement -

ஒருவரது ஜாதகத்தில் சூரியனால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரிய தசை மற்றும் சூரிய புத்தி காலத்திலும் சூரியன் உதிப்பதற்கு முன்பு எழுந்து குளித்து விட்டு சூரியன் உதிக்கும் சமயத்தில் அவரை வணங்க வேண்டும். அதன் பிறகு வீட்டின் பூஜை அறையில் சூரிய பகவானின் படத்தை வைத்து, செந்தாமரை மலர் கொண்டு மாலை செய்து அதை அவருக்கு அணிவிக்க வேண்டும். அதன் பிறகு கோதுமையால் செய்யப்பட்ட ஏதேனும் இனிப்பு வகைகளை சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்து, சூரிய பகவானுக்குரிய காயத்திரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால் சூரிய தோஷம் நிவர்த்தி ஆகும்.

சூரியன் காயத்ரி மந்திரம் படிக்க கிளிக் செய்யுங்கள்

- Advertisement -

சந்திர தோஷம் நீங்க பரிகாரம்:
ஒருவரது ஜாதகத்தில் சந்திரனால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், சந்திர தசை மற்றும் சந்திர புத்தி காலத்திலும் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, துர்கை அம்மனுக்கு வெள்ளை அரளி மாலை சார்த்தி, பால் சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபட்டு, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால் சந்திர தோஷம் நிவர்த்தி ஆகும்.

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்:

- Advertisement -

ஒருவரது ஜாதகத்தில் செய்வாயால் தோஷம் இருந்தால் அதை நாம் செவ்வாய் தோஷம் என்கிறோம். செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட செவ்வாய் கிழமை அன்றும், செவ்வாய் தசை மற்றும் செவ்வாய் புக்தி காலத்திலும் விரதம் இருந்து, செண்பக மலரால் செய்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து, துவரை மற்றும் வெண் பொங்கலை செய்வாய் பகவானுக்கு நைவேத்தியம் செய்து, செவ்வாய் பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகும்.

sevvai

புதன் தோஷம் நீங்க பரிகாரம்:
ஒருவரது ஜாதகத்தில் புதனால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட புதன் கிழமை அன்றும், புதை தசை மற்றும் புதன் புத்தி காலத்திலும் புத பகவானுக்கு வெண் காந்தள் மலர் கொண்டு அர்ச்சனை செய்து, புலி சாதத்தை நைவேத்தியம் செய்து, புதன் பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர புதன் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

குரு தோஷம் நீங்க பரிகாரம்:

guruஒருவரது ஜாதகத்தில் குருவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வியாழக்கிழமை அன்றும், குரு தசை மற்றும் குரு புக்தி காலத்திலும் விரதம் இருந்து, குரு பகவானுக்கு முல்லை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, தயிர் சாதத்தை நைவேத்தியம் செய்து, குரு பகவானுக்கு கொண்டாய் கடலை மாலை சார்த்தி, குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர குருவால் ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

குரு காயத்ரி மந்திரம் படிக்க கிளிக் செய்யுங்கள்

சுக்கிரன் தோஷம் நீங்க பரிகாரம்:
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை அன்றும், சுக்கிர தசை மற்றும் சுக்கிர புக்தி காலத்திலும் விரதம் இருந்து, சுக்கிர பகவானுக்கு வெண்தாமரை மலரால் பூஜை செய்து, நெய்யால் செய்யப்பட்ட பலகாரத்தையோ அல்லது நெய் சாதத்தையோ நைவேத்தியம் செய்து, சுக்கிரன் காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர சுக்கிரனால் ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

சுக்ரன் காயத்ரி மந்திரம் படிக்க கிளிக் செய்யுங்கள்

சனி தோஷம் நீங்க பரிகாரம்:
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட சனிக்கிழமை அன்றும், சனி தசை மற்றும் சனி புக்தி காலத்திலும் விரதம் இருந்து, சனி பகவானுக்கு கருங்குவளை மலரால் அர்ச்சனை செய்து, எள் சாதத்தை நெய்வேத்தியம் செய்து, சனி காயத்ரி மந்திரத்தை 26 முறை ஜெபிப்பதோடு, காகத்திற்கு சனிக்கிழமைகளில் சாதம் வைத்து வந்தால் சனி தோஷம் நிவர்த்தி ஆகும்.

sani

ராகு தோஷம் நீங்க பரிகாரம்:
ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை அன்றும், ராகு தசை மற்றும் ராகு புக்தி காலத்திலும் விரதம் இருந்து, ராகு பகவானுக்கு ராகு காலத்தில் மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து, உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம் செய்து, ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு ராகு காலத்தில் துர்கை அம்மனையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம் நீங்கும்.

ragu

கேது தோஷம் நீங்க பரிகாரம்:
ஒருவரது ஜாதகத்தில் கேதுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி காலத்திலும் விரதம் இருந்து, கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்து, கேது காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு விநாயகப்பெருமானையும் தொடர்ந்து வழிபட்டு வர கேது தோஷம் விலகும்.

English overview:

In every bodies life there will be happy and sad moment. As per astrology all those moments depends on planets position. In tamil its called navagragam. Here we have provided some remedies to get benefits from planets(navagraga dhosam pariharam). We have provided surya, chandra, Budha, sukra, Guru, Sani, ragu, Kethu, Sevvai dosham pariharam in tamil.

- Advertisement -