ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறக்கூடிய நன்மைக்கும் தீமைக்கும் அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பே காரணமாக திகழ்கிறது. கிரகங்கள் ஒவ்வொன்றும் அதற்குரிய இடத்தில் இருந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு மாறாக வேறு இடத்தில் இருந்தால் அதனால் பாதிப்புகள் ஏற்படுவதோடு தோஷங்கள் கூட உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. பலருக்கும் செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் போன்ற தோஷங்கள் தான் தெரியும்.
ஆனால் ஒவ்வொரு கிரகத்திற்கும் தோஷங்கள் என்பது இருக்கிறது. அந்த தோஷங்களால் நம்முடைய வாழ்க்கையில் பல விதமான கஷ்டங்களை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். இந்த கிரக தோஷங்கள் நீங்குவதற்கு ஆடி கிருத்திகையான இன்றைய தினம் இரவு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கிறது. நன்மைகள் செய்யும் கிரகங்களும் இருக்கின்றன. தீமைகள் செய்யும் கிரகங்களும் இருக்கின்றன. கிரகங்களின் கூட்டமைப்பால் நன்மைகளும் ஏற்படும். தீமைகளும் ஏற்படும். இப்படி கிரகங்களை வைத்து பல விதங்களில் பலன்களை கூற முடியும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்குவதற்கு பல பரிகாரங்களும் வழிபாடுகளும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட விசேஷகரமான நாட்களில் நாம் செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் நம்முடைய கிரக தோஷங்கள் அனைத்தையுமே நீக்கிவிடும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம் அப்படிப்பட்ட விசேஷமான நாளான இன்று அதாவது ஆடி கிருத்திகை தினத்தன்று இரவு வழிபாடு எதுவும் செய்யாமல் மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு உறங்கினோம் என்றால் நம்முடைய கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரம் என்ன என்று இப்பொழுது பார்ப்போமா?
இந்த பரிகாரத்தை படுக்கச் செல்வதற்கு முன்பாக செய்ய வேண்டும். முருகப் பெருமானை மனதார வேண்டிக்கொண்டு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மூட்டையாக கட்டி உங்களுடைய தலையணைக்கு கீழ் இந்த மூட்டியை வைத்து படுத்து உறங்க வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து இந்த துவரம் பருப்பை எடுத்து பறவைகளுக்கு தானமாக தந்துவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து நீங்கள் குளிக்கும் தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரை குளிக்க வேண்டும். குளித்து முடித்த பிறகு இந்த ஒரு ரூபாய் நாணயத்தை அப்படியே எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்பொழுது கடலுக்கு செல்கிறீர்களோ அப்பொழுது இந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு போய் அந்த கடலில் போட்டு விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் எப்பேற்பட்ட கிரகமாக இருந்தாலும் அந்த கிரகத்தால் ஏற்படக்கூடிய எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷங்கள் அனைத்தும் முருகப்பெருமானின் அருளால் பரிபூரணமாக நீங்கும். கிரக தோஷம் நீங்கிவிட்டால் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் நல்ல முறையில் நடந்தேறும்.
இதையும் படிக்கலாமே ஆடி இரண்டாம் செவ்வாய் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை இன்று இரவு செய்து கிரக தோஷத்தில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்