உங்களின் பண விரயங்கள் நீங்கி, செல்வச் செழிப்பான வாழ்க்கையை தரும் பரிகாரம்

money

உண்மையான மன மகிழ்ச்சியை பணத்தால் தர முடியாது என்பது உண்மை தான். ஆனால் மனமகிழ்ச்சியை நாம் பெற நமது வாழ்வில் பொருள் சார்ந்த தேவைகள் அனைத்தும் நிறைவடைந்தால் மட்டுமே சாத்தியமாகும். இன்றைய காலத்தில் வேலை அல்லது தொழில், வியாபாரங்கள் புரியும் எவருக்குமே தங்களின் வாழ்வாதார நிலை எப்போது மாறும் என்பதை உறுதியாக கூற முடியாததாக இருக்கிறது. வாழ்வில் ஏற்படும் எத்தகைய கஷ்டங்களையும் போக்கும் வலிமை தெய்வ நம்பிக்கை மற்றும் வழிபாட்டிற்கு உள்ளது. மேலும் அந்த தெய்வீக ஆற்றல்களை நாம் பெறுவதற்கு முன்னோர்கள் கூறிய சில தாந்திரீக வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் கடைபிடித்து வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புத பரிகார முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

mahalakshmi

பச்சைக் கற்பூரம் ஒரு மருத்துவ மற்றும் தெய்வீக ஆற்றல்கள் நிறைந்த ஒரு பொருளாகும். புராணங்களின் படி திருப்பதி ஏழுமலையானுக்கு தாடையில் ஏற்பட்ட காயத்திற்கு இன்று வரை அவரது சிலையில் தாடை பகுதியில் பச்சைக்கற்பூரம் தான் மருந்தாக சாற்றப்படுகிறது. பல ஆயுர்வேத மருந்துகளில் பச்சைகற்பூரம் பயன்படுத்துவதால் நோய்கள் விரைவில் குணமாகின்றன. பச்சைக் கற்பூரத்தை வீட்டிற்குள் வாங்கி வைத்தாலே வீட்டில் இருக்கின்ற எதிர்மறை அதிர்வுகள் நீக்குவதோடு, தெய்வீக சக்திகளை வரவைக்க செய்யும் ஒரு அற்புத பொருளாக இருக்கிறது.

தங்களுக்கு மிகுதியான பொருள் வரவு உண்டாக வேண்டுமென நினைப்பவர்கள் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு சிறிய அளவில் சிவப்பு அல்லது பச்சை நிற பட்டுத் துணியில் 3 பச்சைக்கற்பூரம் துண்டுகளை போட்டு, பச்சை அல்லது சிவப்பு நிற நூலினால் அந்தத் துணியை முடி போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு உங்கள் பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு கற்கண்டுகள், வாழைப்பழம், மலர்கள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து உங்கள் கைகளில் பச்சைக்கற்பூரம் முடிப்பை வைத்தபடி வடக்குத் திசையை பார்த்தவாறு நின்று, “ஓம் மகாலக்ஷ்மியே நமஹ” என மகாலட்சுமி தேவியை உங்கள் மனதில் தியானித்து 21 முறை மந்திரம் துதித்து வர வேண்டும். இப்படி மகாலட்சுமியை துதித்து முடித்ததும், அந்த பச்சை கற்பூரம் முடிப்பை உங்கள் வீட்டில் இருக்கும் அலமாரி பெட்டியிலோ அல்லது உங்கள் தொழில், வியாபாரங்கள் நடக்கும் இடங்களில் இருக்கும் பணப்பெட்டியில் வைத்து விடுவதால் பச்சைக்கற்பூரம் பணத்தை ஈர்க்கும் ஒரு காந்தமாக செயல்பட்டு, உங்களுக்கு அதிகளவில் பணவரவை உண்டாக்க செய்கிறது. பட்டுத் துணியின் முடிப்பில் பச்சை கற்பூரம் கரைந்து விட்டால் புதிய கற்பூரத் துண்டுகளை மேற்கூறிய முறையில் பூஜை செய்து அந்தத் துணியில் முடிந்து, மீண்டும் உங்கள் பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். வசதி உள்ளவர்கள் வாரந்தோறும் புதிய பச்சை கற்பூரங்களை துணி முடிப்பில் வைக்கலாம். இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று சூரியன் முழுமையாக உதிப்பதற்கு முன்பாக செய்வது நல்லது.

pachai karpooram

பச்சை கற்பூரம், கிராம்பு, சோம்பு, ஏலக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பொடி போன்று அரைத்து, ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொண்டு, அதில் பொடியாக அரைத்து கொள்ளப்பட்ட இந்த ஐந்து விதமான பொருட்களையும் போட்டு முடிந்து, உங்கள் வீடு அல்லது தொழில் ஸ்தானத்தில் குபேர மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் கட்டி தொங்க விட வேண்டும் அல்லது அங்கிருக்கும் மேடைகளிலும் அந்த முடிப்பை வைக்கலாம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அன்றும் அந்த முடிப்பிற்கு தூபங்கள் காட்டி, தீபாராதனை செய்து வழிபட்டு வருவது நல்லது. மேற்கூறிய பரிகாரங்களை செய்து வருபவர்களுக்கு வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரங்களில் அதிர்ஷ்டங்கள் பெருகும். வீண் பண விரயங்கள் நீங்கும். செல்வ செழிப்பான வாழ்க்கை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
கடன் தொல்லை, குடும்ப கஷ்டங்கள் தீர பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Green camphor remedies in Tamil. It is also called as Pachai karpooram in Tamil or Pachai karpooram pariharam in Tamil or Athirstam peruga in Tamil or Selvam peruga valimuraigal in Tamil.