ஒரே கல்லில் இரண்டு மாங்காய். சருமம் பொலிவோடு அழகாக இருக்கவும், தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரவும் தினமும் 1 டம்ளர் இந்த ட்ரிங்க் குடித்தாலே போதும்.

face4
- Advertisement -

தலை முடி வளர வேண்டும் என்று முடியின் மேலே எத்தனை பேக் போட்டாலும், நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து நிறைவாக இருந்தால் தான், தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளரும். இதேபோல் தான் சருமம் அழகாக இருக்க, முகத்தில் எந்த பொருட்களை போட்டுக் கொண்டாலும் சரி, அது நமக்கு பலன் தர வேண்டும் என்றால் நம்முடைய உடலில் ஊட்டச்சத்துகள் சீராக இருக்கவேண்டும். நம்மை நாமே அழகாக்கிக் கொள்ள சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து ஹெல்த் டிரிங்க் எப்படி தயாரிப்பது. தெரிந்து கொள்வோமா.

இந்த ஜூஸ் தயாரிக்க நெல்லிக்காய் – 1, கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, லெமன் ஜூஸ் – 1/2 நமக்கு தேவைப்படும். பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி அதையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வடிகட்டி எடுத்து விடுங்கள். இதனுடைய சாறு மட்டும் நமக்கு தேவை. இந்த சாருடன் பாதி அளவு எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்றாகக் கலந்து அப்படியே குடித்து விடவேண்டும். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. முடியவில்லை என்றால் காலை உணவிற்கு பின்பு 1 மணி நேரம் கழித்து இந்த ட்ரிங்க் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் ருசிக்காக ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இருப்பினும் எதுவும் சேர்க்காமல் வெறும் நெல்லிக்காய், கொத்தமல்லி தழை, எலுமிச்சை பழச்சாறு சேர்ந்த பானத்தை குடிப்பது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு, உடலின் அழகை பாதுகாக்க மிகவும் நல்லது. நாம் இதில் சேர்த்து இருக்கக்கூடிய பொருட்களில் வைட்டமின் சி சத்து நிறைய நிறைய உள்ளது.

- Advertisement -

ஆகவே முடி வளர்ச்சியை தூண்டும். சருமத்தின் நிறம் அதிகரிக்கும். தோல் சுருக்கத்தை குறைக்கவும் இந்த ட்ரிங்க் நமக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். இதோடு சேர்த்து முகத்தை அழகு படுத்துவதற்கு இன்னொரு சிறிய டிப்ஸ் உங்களுக்காக.

ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் – சிவப்பு சந்தனம், 1 ஸ்பூன் – கஸ்தூரி மஞ்சள், சேர்த்து கொஞ்சமாக தயிர் விட்டு கலந்து இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இப்படி தினமும் முகத்தில் போட்டு வர, 5 நாட்களில் உங்களுடைய முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். அதாவது நீங்கள் இருக்கக்கூடிய கலரை விட இன்னும் கொஞ்சம் கூடுதலாக வெள்ளையாக மாறி இருப்பதை உணரமுடியும். ட்ரை பண்ணி பாருங்கள்.

- Advertisement -