உங்களுடைய தலை ஸ்கால்ப் பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் பெற க்ரீன் டீயை இப்படி செய்யுங்கள்! கொத்துக் கொத்தாக முடி கொட்டினாலும் சட்டென்று நிற்கும். வேகமாக முடியும் வளரும், கெட்ட கொழுப்பும் கரையும்!

green-tea-hair-fall
- Advertisement -

நம் தலைமுடி வேகமாக உதிர்வதற்கு மிக முக்கிய காரணம் ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் ரத்த ஓட்டம் சீராக இல்லாதது தான். ஸ்கால்ப் பகுதியில் ஆரம்பித்து ஒவ்வொரு முடியாக கொட்ட துவங்கி இறுதியில் வழுக்கைத்தலை ஆவது, தலைமுடியின் அடர்த்தி குறைந்து மண்டை தெரியும் படி மாறுவது போன்ற பிரச்சினைகள் வந்து விடுகிறது. இதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய முடியாதவர்கள் இந்த ஒரு விஷயத்தை செய்து பாருங்கள், ஸ்கால்ப் பகுதிக்கு நல்ல ஒரு ரத்த ஓட்டம் கிடைத்து முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முளைக்க துவங்கும்.

கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலுக்கு மட்டும் அல்லாமல், தலைமுடியின் ஸ்கால்ப் பகுதியிலும் நல்ல ஒரு ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கக் கூடிய அற்புதமான மருந்தாக செயல்படுகிறது. நம் உடலில் இருக்கும் மெட்டபாலிசம் அதிகரிக்க தினமும் கிரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க செய்யும் என்று நமக்கு தெரியும். ஆனால் தலை முடியின் வேர்கால்களுக்கு இப்படி மசாஜ் செய்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நமக்கு முழுமையாக கிடைக்க வெதுவெதுப்பான தண்ணீரில் டீ பேக்குகளை 10 முறை முக்கி எடுங்கள். இது டீ குடிப்பது போல நிறைய தண்ணீர் ஊற்றி செய்வது கிடையாது. உங்களுக்கு ஸ்கால்ப் பகுதியில் தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீரை கொதிக்க வைத்து இது போல் செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த தண்ணீரை தலையில் நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

குறைந்தது பத்து நிமிடம் நன்கு மசாஜ் செய்து பின்பு, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் வினைபுரிந்து நமக்கு ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து சீரற்ற முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் ரத்தத்தை சரி செய்து முடி கொட்டுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்துகிறது. இதன் பிறகு நீங்கள் வழக்கம் போல சாதாரண ஷாம்புகளை பயன்படுத்தி தலைமுடியை அலசிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஷாம்பூ பயன்படுத்துபவர்கள் அதை சிறிதளவு தண்ணீரில் கலந்து பயன்படுத்துங்கள், அப்படியே பயன்படுத்தினால் அதனுடைய செயற்கை இரசாயனங்களை நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது போல ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செய்து வர 4 வாரங்களில் உங்களுடைய தலைமுடி முற்றிலுமாக உதிர்வது நின்றுவிடும். அதன் பிறகு மீண்டும் அந்த இடத்தில் முடி வளரத் துவங்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால் தலைப்பகுதிக்கு மட்டுமல்லாமல், உடலுக்கு உள்ளேயும் கிரீன் டீயை தினமும் எடுத்துக் கொண்டு வாருங்கள்.

இதுவும் தலைமுடி பிரச்சனையை சரி செய்யும். மேலும் கிரீன் டீயில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்க சர்க்கரை சேர்க்கக்கூடாது. எனவே சிறிதளவு எலுமிச்சை சாரு, தேன் போன்றவற்றை சேர்த்து பருகலாம். சர்க்கரை மட்டும் சேர்த்து விடாதீர்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்து வந்தால் தலைமுடி மற்றும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் வெளியேறி உடல் கட்டுக் கோப்பாகவும், தலைமுடி அடர்த்தியாகவும் வளரும்.

- Advertisement -