கிரக தோஷம் விலக ஆஞ்சநேயர் வழிபாடு

hanuman1
- Advertisement -

இன்று பெரும்பாலான மக்கள் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மனதளவில் நிறைய பயம் வந்துவிடுகிறது. ஏழரை சனி நடக்கிறது. என்ன பிரச்சனை வந்து விடுமோ. வாழ்க்கையில் தோற்றுவிடுவோமோ. கையில் இருக்கும் பணமெல்லாம் காலியாகி விடுமோ.

தொழிலில் நஷ்டம் வந்து விடுமோ என்ற எதிர்மறை சிந்தனையில் தங்களுடைய வாழ்க்கையை நரகமாக மாற்றிக் கொள்கிறார்கள். இதனால் இரவில் நல்ல தூக்கம் கூட இவர்களுக்கு வருவதில்லை. சனிபகவான் மட்டுமல்ல எந்த கிரக தோஷங்களும் உங்களை ஒன்றுமே செய்யாது. வியாழக்கிழமை அனுமனை இப்படி வழிபாடு செய்தால்.

- Advertisement -

கிரக தோஷம் விலக அனுமன் வழிபாடு

வியாழக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் கோவிலில் சென்று இதை செய்யலாம். 2 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வையுங்கள். அனுமனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை சொல்லி மூன்று முறை அனுமனை வளம் வந்து, அனுமனுக்கு முன்பாக அமர்ந்து கொள்ளுங்கள் பின் சொல்லக்கூடிய மந்திரத்தை ஒரே ஒரு முறை உச்சரித்தால் போதும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் எனும் பட்சத்தில் 3 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய வாயு
புத்ராய மகா பலாய, சீதா துக்க நிவாரணாய,
லங்கா விதாஹகாய மஹா பலப்ரகண்டாய
பல்குணசகாய கோலாகல சகல பிரம்மாண்ட
பாலகாய சப்த சமுத்ர நிராலங்கிதாய

- Advertisement -

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் இருந்தால், அந்த இடத்தில் விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை சொன்னால் மேலும் சிறப்பான பலனை கொடுக்கும். ஆனால் எல்லா இடத்திலும் பஞ்சமுக ஆஞ்சநேயரது கோவில் இருக்காது. அதனால் சாதாரண ஆஞ்சநேயர் கோவிலிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

தொடர்ந்து 9 வியாழக்கிழமை இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் மன நிம்மதி கிடைக்கும். சனிபகவானால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வியாழக்கிழமை தோறும் வீட்டில் இருந்தே ஹனுமனை நினைத்து விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை சொல்லலாம். ஆண்களும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். பெண்களும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கொத்தோடு பிரச்சனைகள் தீர கொத்தவரங்காய் பரிகாரம்

பிரச்சனைகள் இருக்கும் போது, அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் போது, மன நிம்மதி அடையும். மனம் நிம்மதி அடைந்தால் தானாக இரவு தூக்கம் வரும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இப்படி பல நன்மைகளை கொடுக்கக்கூடிய இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -