கிரைண்டரை இப்படி தான் யூஸ் பண்ணனுமா? இது கூட தெரியம்மா தான் இத்தனை நாள் இருந்தோமா? இந்த பதிவை படிச்சா பிறகு உங்களுக்கும் இப்படி தாங்க தோணும்.

- Advertisement -

நாம் இப்போது எலக்ட்ரானிக் பொருட்களை கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம் அயர்ன் பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர் அது மட்டும் இல்லாமல் இன்னும் பல புதிய நவீன சாதனங்களும் இ ப்போது வந்து விட்டது. இருந்தாலும் இந்த மிக்ஸி கிரைண்டர் போன்றவைகளை பயன்படுத்துவதை விட பராமரிப்பதில் கொஞ்சம் கவனமாகவும், அக்கறையாகவும் இருக்க வேண்டும். அதே போல் இவற்றில் எதை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று சரியாக அதற்கு பயன்படுத்தினால் பொருள்கள் நீண்ட நாள் உழைக்கும்.இப்போது இந்த கிரைண்டரை எப்படி பயன்படுத்துவது என்றும் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று ஒரு சிறு குறிப்பு சுத்தம் செய்வது எப்படி என்கிற தகவலும் இந்த பதிவில் உங்களுக்காக.

கிரைண்டர் வாங்கும் போது எப்போதுமே அது நம் வீட்டில் எந்த அளவிற்கு உபயோகிக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு அதன் கேப்பாசிட்டி தெரிந்து கொண்ட பிறகு வாங்கி பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

- Advertisement -

கிரைண்டரை உபயோகிக்கும் போது நாம் முதலில் கிரைண்டர் ஸ்விட்ச் ஆன் செய்து ஓட ஆரம்பித்த பிறகு அதில் பொருட்களை சேர்ப்போம். அப்படி செய்தால் கிரைண்டர் அதிக நாட்கள் வராது கல் சீக்கிரம் தேய்ந்து விடும். கிரைண்டரில் எதை அரைக்க வேண்டுமோ அதை சேர்த்த பிறகு ஆன் செய்ய வேண்டும் இல்லை என்றால் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி கிரைண்டர் ஓட விட்டுப் பிறகு நீங்கள் சேர்க்க வேண்டியதை சேர்த்துக் அரைக்க ஆரம்பிக்கலாம். வெறும் கல் ஓடினால் கிரைண்டர் சீக்கிரம் பழுதடைந்து விடும்.

அடுத்து அதிக அளவில் அரைக்கும் போது மிக்ஸியை விட கிரைண்டரை சிறந்தது. உதாரணத்திற்கு ஏதோ விசேஷ நாட்களில் வீட்டில் அனைவரும் இருக்கும் நேரத்தில் அடிக்கடி அரைக்க வேண்டியது இருக்கும். அது போன்ற சமயங்களில் மிக்ஸியில் அடிக்கடி போட்டு சத்தம் ஒரு பக்கம் இடைஞ்சலாக இருந்தாலும், பொருள் சீக்கிரம் வீணாகிவிடும் அதனால் அதிக அளவில் அரைக்கும் பொருட்களை கிரைண்டரில் போடுவது நல்லது.

- Advertisement -

இப்படி கிரைண்டரில் அரைக்கும் போது இன்னொரு மிகப்பெரிய நன்மையும் உண்டு என்னவென்றால் மிக்ஸியில் அரைக்கும் பொருளை விட கிரைண்டரில் அரைக்கும் பொருளில் சுவை அதிகமாக இருக்கும். ஏனெனில் மிக்ஸியில் அரைக்கும் போது மிக்ஸி உடனே சூடாகி அரைப்படும் பொருளின் தன்மை மாறும் வாய்ப்பு அதிகம். கிரைண்டரில் அப்படி ஆக வாய்ப்பு மிகவும் குறைவு.

அதே போல் தேங்காய் பால் அதிக அளவில் தேவைப்படும் போது கட்டாயமாக மிக்ஸியை விட கிரைண்டர் தான் சிறந்தது. கிரைண்டரின் நீங்கள் தேங்காய் சேர்த்து எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டுமோ அதைவிட கொஞ்சம் கூடுதலாகவே கூட ஊற்றி அரைத்துக் கொண்டால் பாலும் அதிகமாக கிடைக்கும், அதிக திக்காகவும் இருக்கும். மிக்ஸியில் அப்படி எடுக்க முடியாது. ஆகையால் தேங்காய்ப் பால் எடுக்க முடிந்த அளவுக்கு கிரைண்டரை யூஸ் செய்வது நல்லது.

- Advertisement -

இன்னொரு முக்கியமான நாம் கவனிக்க வேண்டிய விஷயம் கிரைண்டரின் கொள்ளளவு எவ்வளவோ அதைவிட கொஞ்சம் குறைவாகத்தான் நாம் எப்போதும் அதில் பொருள்களை அரைக்க வேண்டும். அதனுடைய கொள்ளவுக்கு மீறி அரைக்கும் போது கிரைண்டர் சீக்கிரம் பழுதடையும் வாய்ப்பு அதிகம்.

கிரைண்டரின் உட்புறம் சுத்தம் செய்ய ஏதாவது அரிசி ரேஷன் அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பிறகு அந்த அரிசியை தண்ணீருடன் அப்படியே சேர்த்து அரைத்தால் அதில் இருக்கும் மண் துகள் போன்றவை இந்த அரைபடும் அரிசியில் சேர்ந்து கொள்ளும். இந்த அரிசியை கிரைண்டரில் இருந்து வழித்து கொட்டாங்குச்சியில் வைத்து நல்ல வெயில் படும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எல்லாம் கொட்டாங்குச்சி அடியில் இருக்கும் ஓட்டையில் வடிந்து இந்த அரிசி காய்ந்து விடும் அதை அடுத்து பறவைகளுக்கு உணவாக போட்டு விடலாம்.

மாவரைத்த பிறகு கிரைண்டரை சுத்தம் செய்ய அதில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் லிக்விட் சேர்த்து விட்டால் போதும் முழுவதுமாக சுத்தமாகி விடும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல் வெளியே எடுத்து வெளிப்புறம் ஏதாவது லேசான நார் வைத்து தேய்த்துக் கொள்ளலாம். தேய்த்த கிரைண்டரை எப்போதும் கவிழ்த்து காய வைக்க கூடாது. நிமிர்த்தி வைத்து தான் காய வைக்க வேண்டும். அப்போது தான் நன்றாக காயும், வாடையும் வராது. கிரைண்டரை வெளியே சுத்தம் செய்ய ஏதாவது பிறகு காட்டன் துணி வைத்து துடைத்துக் கொள்ளலாம். கிரைண்டரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம், சுத்தப்படுத்தும் முறை இதையெல்லாம் இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -