உங்கள் புது வீடு கிரகப்பிரவேசம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

new-house-graga

மனிதர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வசிப்பதற்கு சொந்த வீடு ஒன்று இருப்பது அவசியம் ஆகும். நாம் மற்றும் நமக்கு பிறகான வருங்கால சந்ததியினர் பல்லாண்டுகள் சீரும் சிறப்புமாக வாழவிருக்கும் புது வீட்டில் என்றென்றும் தெய்வீக அருள் நிறைந்திருக்க கிரகபிரவேசம் சடங்கு செய்யப்படுகிறது. இந்த கிரகப்பிரவேசம் சடங்கை முறையாக செய்வது எப்படி என இங்கு தெரிந்து கொள்ளலாம்.

home

கிரகப்பிரவேசம் எனப்படும் புதுமனை புகுவிழாவை மாசி, வைகாசி, ஆவணி போன்ற மாதங்களில் செய்வது சிறந்ததாகும். அனுபவம் வாய்ந்த வேதியரை அணுகி கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்த முகூர்த்த தினத்தை குறித்து கொள்ள வேண்டும். ஒரு முகூர்த்த தினத்தில் மஞ்சளும் பசுமையும் கலந்த உங்கள் வீட்டின்
வண்ண கிரகப்பிரவேச அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமம்,வெற்றிலை -பாக்கு, மஞ்சள் ஆகியவற்றோடு சேர்த்து கொடுக்க தொடங்க வேண்டும்.

பொதுவாக கிரகப்பிரவேச பூஜை மற்றும் ஹோமத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் செய்வதே சிறந்ததாகும். காலை 9 மணிக்குப் பிறகு நல்ல நேரமாகவே இருந்தாலும் கிரகப்பிரவேசம் சடங்கு மற்றும் ஹோமம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதிகாலை 4 மணிக்கு கிரகப்பிரவேச பூஜை செய்யப்படும் போது, அதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிரகப்பிரவேச சடங்குகளை எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் செய்ய வேண்டும். மிகுந்த ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து, வீட்டின் தலைவர்களான கணவன் – மனைவி பாரம்பரிய வேட்டி, சேலை உடைகளை பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு கிரகப்பிரவேச பூஜை சடங்குகளை செய்ய வேண்டும்.

new home

உங்கள் வீடு கட்டியிருக்கும் பகுதியில் அருகே உள்ள ஏதேனும் ஒரு கோயிலின் கோபுர வாசலில் சாமிப்படம், அரிசி, உப்பு, பருப்பு, குடத்தில் நீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வந்து பூஜை முறைகளை செய்வதால் தெய்வங்களின் அனுக்கிரகம் உங்களுக்கு உண்டாகும்.

- Advertisement -

gragapravesam

புதிய வீட்டிற்குள் தெய்வீக விலங்கான கன்று ஈன்ற பசுமாட்டை அழைத்து வந்து கோ பூஜை செய்யும் போது வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து, அதன் கன்றிருக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவை மற்றும் அகத்தி கீரையை அப்பசுமாடு உண்ண கொடுக்க வேண்டும். பின்பு அன்றைய தினத்தில் காலையில் வரும் சுப முகூர்த்த நேரம் முடியும் முன்பாக அடுப்பில் ஒரு புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து, பசும்பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் போங்கி வந்த பின் கைகூப்பி வணங்கி அதனை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். இவ்வாறாக முறைப்படி கிரகப்பிரவேச சடங்கு செய்வதால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் என்றென்றும் நன்மையான பலன்களை பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
மாவிளக்கு பூஜை பலன்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Gruhapravesam procedure in Tamil. It is also called as House warming ceremony in Tamil or Puthumanai pugu vila in Tamil or Gruhapravesam muhurtham in Tamil or Gragapravesam seiyum murai in Tamil.