சொன்னா நம்பவே மாட்டீங்க! ஒரு முறை, இத மட்டும் தலையில் போட்டா போதும். ஒரு முடிகூட தலையிலிருந்து கொட்டுவதற்கு வாய்ப்பே கிடையாது.

long-hair
- Advertisement -

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு நிரந்தர தீர்வு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு சுலபமான முறையில் ஒரு ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இத ஃபாலோ பண்ண உங்களுக்கு நிச்சயம் ஒரு முடிகூட தலையிலிருந்து உதிர்வதற்கு வாய்ப்பே கிடையாது. 100% கேரண்டி. நிறைய பேருடைய வீட்டில் தரையில் மூலை முடுக்குகளில், குப்பை இருக்கிறதோ இல்லையோ, தலை முடி கொத்துக் கொத்தாக இருக்கும். உங்களோட முடியும் சும்மாவே, தொடாமல் இருந்தால்கூட உதிர்கிறதா? இனி கவலைய விடுங்க! இத மட்டும் பண்ணுங்க போதும்.

guvava-leafe

தலையில், முடியின் மேல் எப்படிப்பட்ட எண்ணெய், எப்படிப்பட்ட பொருட்களை அரைத்து தடவினாலும் சரி, நாம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்முடைய முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும். முடிக்கு மேலே ஆயிரக்கணக்கில் காசைக் கொடுத்து ஹேர் ஆயில் வங்கி தேய்த்தாலும், நாம் சாப்பிடும் உணவுகளில் சத்துக்கள் இல்லை என்றால், முடியின் மேலே தடவும் பொருட்களுக்கு பலன் இருக்காது.

- Advertisement -

அந்த வரிசையில் தினம் தோறும் இரவில், ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, பசும் பால் 1 டம்ளர், பேரிச்சம் பழம் 2, அத்திப்பழம் 1, இந்த மூன்று பொருட்களையும் சாப்பிட்டுவர வேண்டும். கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் உடலில் நிறைந்திருந்தால் மட்டுமே முடி உதிர்வு கட்டுப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

dates

இதை தவிர்த்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தவரை ஃபில்டர் செய்யாத, இயற்கை சத்துக்கள் நிறைந்த தண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்களுக்கு இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை சூடுபடுத்தி ஆற வைத்து, அதன் பின்பு குடிநீராக பயன்படுத்தலாம். முடிந்தவரை வாட்டர் பியூரி லிருந்து கிடைக்கும் தண்ணீரை பருகாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

- Advertisement -

மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் பின்பற்றி வர வேண்டும். இதோடு சேர்த்து, கொஞ்சமாக கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்களுடைய முடிக்கு தகுந்த வாரி எடுத்துக் கொள்ளலாம். அதை மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கொய்யா இலை விழுதை உங்களது தலை முடியின் வேர்க்கால்களில் படும்படி தடவி, 5 நிமிடங்கள் மட்டுமே ஊறவைத்து, அதன் பின்பு தலையை நன்றாக தேய்த்து அலசி விட வேண்டும். ஷாம்பு சீயக்காய் போட வேண்டாம். வெறும் தண்ணீரை வைத்தே தலையை சுத்தம் செய்து விடுங்கள். கொய்யா இலைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது உடனே நிற்கும்.

guvava-leafe1

வாரத்தில் இரண்டு நாட்கள் கொய்யா இலைகளை தலைமுடியில் போட்டு வருபவர்களுக்கு, முடி உதிர்வு விரைவாக குறைய தொடங்கும். இதோடு சேர்த்து உங்களது முடி பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால், கொஞ்சமாக பீட்ரூட்டை எடுத்து மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைத்து, அந்த பேஸ்ட்டை எடுத்து தலையில் தடவி 5 நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின்பு ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து வந்தாலே போதும். தலைமுடி பளபளப்பாகும். அதாவது ஷைனிங்காக மாறிவிடும். பீட்ரூட்டை தலையில் தடவுவதன் மூலம் தலைமுடி கலர் மாறாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வெண்ணை பந்து போல இட்லி மாவு 10 நிமிடத்தில் அரைக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா? இவ்வளவு நாளா இதை தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட போறீங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -