எரிசேரி செய்வது எப்படி என்று பார்ப்போம்

Eriserry
- Advertisement -

“எரிசேரி” என்பது பழந்தமிழர்களின் உணவு ஆனால் தற்காலத்தில் இது கேரளா மாநிலத்தவர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு பிரபல உணவாக இருக்கிறது. இதில் வாழைக்காய் சேனைக்கிழங்கு போன்றவைகளை சேர்த்து செய்வதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகையாக கேரளாவில் உள்ளது. இதனை நாம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

Eriserry_1

எரிசேரி செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

வாழைக்காய் – 1
சேனைக்கிழங்கு – 1/2
துருவிய தேங்காய் – 1/2 மூடி
எண்ணெய் – சிறிதளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
சீரகத்தூள் – சிறிதளவு

எரிசேரி செய்முறை:

முதலில் மிக்சியில் துருவிய தேங்காய் மற்றும் சீரம் சேர்த்து அரைத்து எடுத்துவைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சேனைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

- Advertisement -

Eriserry_2

பிறகு அதனை நன்றாக வேக விடவும். நன்றாக வெந்ததும் அதனுடன் உப்பு சேர்க்கவும்.பிறகு அதனுடன் நாம் ஏற்கனவே அரைத்து நடித்துள்ள தேங்காயை கொட்டி சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

Eriserry_3

பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் , காய்ந்தமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை கடாயில் கொட்டி நன்றாக வேக விடவும். பிறகு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான எரிசேரி தயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

2019 ஆம் ஆண்டு ராசிபலன்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே:
நூடுல்ஸ் செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Erissery recipe in Tamil. It is also called as Erissery seimurai or Erissery seivathu eppadi in Tamil or Erissery ingredients in Tamil.

- Advertisement -