உங்க வீட்டு தோட்டத்தில் பன்னீர் ரோஜா செடியை இப்படி வச்சு பாருங்க! எல்லாக் கிளைகளிலும் நிச்சயம் கொத்துக்கொத்தாக பூ பூக்கும்.

rose

நம் நாட்டில் பெரும்பாலான வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் மலர் செடி வகைகளாக மல்லி, செம்பருத்தி, ரோஜா போன்றவையே அதிகம். அதிலும் ரோஜா மலர் செடிகளை வளர்க்காதவர்கள் என்று அனேகமாக யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ரோஜா செடிகளில் பல வகைகள் இருக்கின்றது என்றாலும் நம் நாட்டில் மிகப் பழங்காலத்திலிருந்தே வளர்க்கப்படுகின்ற ரோஜா வகையாக “பன்னீர் ரோஜா செடி” இருக்கிறது. இதை “குல்கந்து” ரோஜா என்றும் சிலர் அழைப்பார்கள். பலவகையான மருத்துவ குணங்கள் நிறைந்த மலர்களை தருகின்ற இந்த பன்னீர் ரோஜா செடியை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது என்பது பற்றிய சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

rose

பன்னீர் ரோஜா செடி ஒரு வெப்பமண்டல தாவர வகையாகும். இந்தப் பன்னீர் ரோஜா செடியின் பூர்வீகம் சிரியா மற்றும் மத்திய ஆசிய பகுதிகள் என கருதப்படுகிறது. இந்தச் செடி மிதவெப்ப நாடுகளிலும் நன்றாக வளரக்கூடிய ஒரு செடியாக விளங்குகிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கின்ற சீதோஷண நிலை, மண் வகைகளில் இந்த பன்னீர் ரோஜா செடி நன்கு வளரக் கூடியதாகவே இருக்கிறது. இந்த பன்னீர் ரோஜா செடியை நாம் முறையாக பராமரித்தால் இந்த ரோஜா செடி 3 மீட்டர் உயரம் வரை வளர்ந்து குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரையாவது உயிருடன் இருக்கும் என தோட்டக்கலை மற்றும் தாவரவியல் வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

தங்கள் தோட்டத்தில் நீண்ட காலம் பன்னீர் ரோஜா செடி இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அந்த செடியை நடும் இடம் நன்கு சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த பன்னீர் ரோஜா செடி நம் நாட்டு சீதோஷண நிலைக்கு அனைத்து காலங்களிலும் செடி கன்றினை வாங்கி நட்டு வைத்தால் வளரும் என்றாலும் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாத காலம் தான் மிகவும் சிறந்தது. புதிய பன்னீர் ரோஜா செடி கன்றுகளை இந்த மாதங்களில் நடுவதால் அப்போது ஏற்படும் இயற்கையான மழைப்பொழிவு மற்றும் வானிலை தன்மை காரணமாக நன்கு வளர்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது.

பன்னீர் ரோஜா செடி நன்கு செழிப்பாக வளர சூரிய ஒளி அதிகம் தேவை என்பதால் வீட்டுத் தோட்டங்களில் இந்த செடியை வளர்க்க விரும்புபவர்கள் மரங்களுக்கு கீழ் இருக்கும் நிழலான பகுதிகளை தவிர்த்து, நன்கு சூரிய ஒளி இருக்கின்ற இடத்தில் இந்த செடிகளை நட்டு வளர்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறிய தொட்டிகளில் இந்த செடியை வளர்ப்பவர்கள் தினமும் குறைந்த பட்சம் 6 முதல் 7 மணி நேரமாவது சூரிய ஒளியில் இந்த பன்னீர் ரோஜா செடி இருக்கின்ற தொட்டியை வைத்து எடுக்க வேண்டும். இந்த பன்னீர் ரோஜா செடிக்கு அதிகம் சூரிய ஒளி கிடைத்தால் மட்டுமே இந்த செடியில் பூக்கள் அதிகம் பூப்பதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.

பன்னீர் ரோஜா செடியை வளர்க்க விரும்புபவர்கள் மற்ற பன்னீர் ரோஜா செடியில் இருந்த கிளையினை வெட்டியெடுத்து வைத்து மண்ணில் நட்டு வளர்க்கலாம் அல்லது உங்களுக்கு நம்பகமான செடி வகைகளை விற்பனை செய்யும் பிளான்ட் நர்சரியில் இருந்து இந்த பன்னீர் ரோஜா செடி கன்றை வாங்கி வைத்து, நட்டு வளர்க்கலாம் மழை, குளிர் காலங்கள் தவிர்த்து கோடைகாலங்களில் இந்த செடிக்கு தண்ணீர் நன்கு ஊற்ற வேண்டும். பன்னீர் ரோஜா செடிகளில் அதிக அளவு ரோஜா பூக்கள் மலர கடைகளில் விற்கின்ற ரோஜா செடிகளுக்கான உரங்களை வாங்கி பயன்படுத்துவதை காட்டிலும், உங்கள் வீட்டில் மீதமாகின்ற சமையல் கழிவுகளை இந்த ரோஜா செடியின் வேர் பகுதிகளில் போட்டு விடுவதால், அவையே இந்தச் செடிகளுக்கு ரசாயன கலப்படம் இல்லாத இயற்கை உரமாக மாறி அந்தச் செடி மற்றும் அதில் பூக்கள் நன்கு செழிக்க உதவி புரியும்.

rose1

பன்னீர் ரோஜா செடி உயரமாக வளர, வளர அதன் கிளைகளை அடிக்கடி வெட்டிவிட வேண்டும். இதன் காரணமாக இந்தச் செடியை உயரமாக வளராமல், அதிக பக்க கிளைகள் முளைத்து, அதிக அளவு பன்னீர் ரோஜாப்பூக்கள் பூப்பதற்கு வழிவகை செய்யும். “குல்கந்து” மற்றும் “பன்னீர்” தயாரிப்புக்காக பன்னீர் ரோஜா செடியை வளர்ப்பவர்கள் இந்த ரோஜா மொட்டு நன்கு வளர்ந்த இடம் அது மலர்வதற்கு முன்பாகவே அறுவடை செய்துவிட வேண்டும். இதனால் பன்னீர் ரோஜா மலர்களின் இதழ்கள் உதிர்ந்து வீணாவதை தவிர்க்க முடியும். வெளிப்புறத் தோட்டம் இல்லாமல் நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற குறைந்த இடத்தில், தொட்டிகளில் இந்த பன்னீர் ரோஜா செடியை நட்டுவைத்து மேற்சொன்ன முறைகளை பின்பற்றி இந்த பன்னீர் ரோஜா செடியினை பராமரித்தால் நல்ல பலன்களை பெற முடியும்.