நன்மைகள் பல தரும் சனி பகவான் காயத்திரி மந்திரம்

சூரிய புத்திரனான சனி பகவானை கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர்  நமக்கு பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள் பெருகும், நீண்டகாலம் நோய் நொடி இன்றி வாழலாம், சமுதாயத்தில் அந்தஸ்து கூடும், தலைமைத்துவதோடு வாழ வழி உண்டாகும். இப்படி பல நன்மைகளை தரும் சனிபகவானின் காயத்திரி மந்திரம் இதோ.

om manthiram

சனி பகவான் காயத்ரி மந்திரம்

‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’

பொருள்:

காகக் கொடியை உடையவரும், கையில் கமண்டலத்தை கொண்டவரும், மெதுவாக நகரும் தன்மை கொண்டவருமான சனி பகவானை நினைத்து தியானம் செய்வதன் பலனாக அவர் நம்மை காத்து ரட்சிப்பார்.

இதையும் பார்க்கலாமே:
அனுமனுக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ

இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை ஜெபிப்பதன் பலனாக மேலே கூறிய பலன்கள் அனைத்தையும் பெறலாம்.

சனிபகவான் பற்றிய சிறு தகவல் :
நமது சூரிய குடும்பத்தில் 9 கிரகங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது கிரகங்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் மற்றும் கதிர்வீச்சுகள் பல லட்ச கிலோமீட்டர்கள் தாண்டி இந்த பூமியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது பண்டைய ஜோதிட சாத்திரமும், இன்றைய நவீன விஞ்ஞானமும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்கின்றன. அப்படியான அந்த நவகிரகங்களில் பூமியில் வாழும் மனிதர்களின் மீது மிகவும் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக “சனிபகவான்” கருதப்படுகிறார்.

Sani Baghavan

வானியல் ஆய்வாளர்கள் இந்த சனிக்கிரகம் பூமிக்கு மிகவும் தொலைவிலிருக்கும் அதே நேரத்தில் மெதுவான சுழற்சி கொண்ட ஒரு கிரகம் என்று வரையறுத்து இருக்கிறார்கள். இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த நம் நாட்டு வானியல் நிபுணர்கள் மெதுவாக இயக்குபவன் என்று பொருள் படும் “மந்தன்: என்ற பெயரை சனிபகவானுக்கு சூட்டினார்கள். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சனிபகவான் இப்பூமியில் வாழும் மனிதர்களின் மீது செலுத்தும் ஆற்றல் பலம் மிக்கது. எனவே அவரை வழிபட்டு அவரின் கேடான பலன்கள் நமக்கு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வோம்.

தெய்வீகம் வீடியோ : Dheivegam
English Overview:
Here we have Sani Bhagavan Gayatri mantra in Tamil. Usually, people will get afraid of Sani Bhagavan. By Chanting this mantra all the negatives will get changed to positive.