குரு பகவானால் பல பலன்களையும் பெற இதை செய்தால் போதும்

Guru Baghavan

மனிதர்களும் மற்ற உயிரினங்களும் வாழும் இந்த பூமியின் மீது மற்ற கிரகங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வானியல் சாத்திர நிபுணர்கள் மற்றும் சித்தர்கள் கண்டுபிடித்தனர். இதை இக்காலத்திய நவீன விஞ்ஞானிகள் சமீப வருடங்களில் தான் உண்மை என ஒத்துக்கொண்டனர். இந்த கிரகங்களில் ஒவ்வொன்றும் அதற்குரிய கால நிர்ணயத்தின் அடிப்படையில் இந்த பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படி வருடத்திற்கொருமுறை ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் குருபகவானால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அவருக்கான பரிகாரம் பற்றியும் இங்கு காண்போம்.

Guru astrology

ஜோதிட சாத்திரத்தின் படி நவகிரகங்களில் இருக்கும் ஒரே முழுமையான சுப கிரகம் குரு பகவான் ஒருவரே ஆவார். ஒரு மனிதனின் நற்குணங்களுக்கும், நீதி வழுவா தன்மைக்கும், பிறருக்கு போதனை செய்யும் நிலைக்கும், உயர் பதவிகளுக்கும் குரு பகவான் காரகனாகிறார். ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த நேரத்தில் குரு கிரகம் தனது சொந்த ராசிகளிலோ அல்லது உச்சம் பெறக்கூடிய ராசிகளிலோ இருந்தால் அந்த நபருக்கு குரு பகவானின் திசை நடக்கும் காலத்தில் அனைத்தும் நல்ல பலன்களாகவே ஏற்படும். அப்படி இல்லாத பட்சத்தில் குரு பகவானின் திசை காலத்தில் சுமாரான அல்லது கெடுதலான பலன்களே ஏற்படும்.

குரு பகவான் பலன்கள்

இந்த குரு ஆதிக்கம் ஒருவருக்கு பலமாக இருக்கும் பட்சத்தில் அவர் எதற்கும் அஞ்சாத குணம் கொண்டவராகிறார். மேலும் பல வகையான சாத்திரங்களையும் கற்று தேர்ச்சி பெற்று, அதை பிறருக்கு போதனை செய்யும் ஆசிரியர்களாகவும், ஆன்மீகத்தை வளர்க்கும் ஞானகுருவாகவும் இருப்பார்கள். ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாக இந்த குரு கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். மேலும் உயர்ந்த பதவிகளும் மற்றும் பொன் ஆபரண சேர்க்கைக்கும் இந்த குரு காரகனாகிறார். எண் கணித சாத்திரத்தின் படி 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிறார்கள்.

navagragham

குரு பகவான் பரிகாரம்

ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இல்லாமல் பிறந்தவர்களும், தற்போது நடக்கும் குரு கிரக பெயர்ச்சி சாதகமான நிலையில் இல்லாதவர்களும், குரு பகவானின் நல்லாற்றல்களை பெற வேண்டும் என நினைப்பவர்களும் குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட சித்தர்கள், ஞானிகளின் வழிபாட்டிற்குரிய வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிவதை வழக்கமாக கொண்டால் குரு பகவானின் நன்மையான பார்வை நம் மீது விழும் மேலும். அன்றைய தினத்தில் காலை நேரத்தில் நவ கிரக சந்நிதி இருக்கும் கோவிலுக்குச் சென்று, 27 கொண்டை கடலைகளை மஞ்சள் நிற நூலில் மாலையாக கோர்த்து, நவகிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு அந்த மாலையை சாற்றி, நெய் தீபம் ஏற்றி குரு பகவானுக்குரிய மந்திரங்கள் தெரிந்தால், அதை 9 முறை கூறி வணங்கி குரு பகவானை 9 வலங்கள் வந்து, பின்பு அக்கோவிலிலிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். இப்படி 9 வாரங்கள் செய்து வந்தால் உங்களுக்கு நடக்க வேண்டிய எந்த ஒரு காரியமும் அந்த குரு பகவானின் அருளால் நிச்சயம் நடக்கும். இந்த வழிபாட்டை வாழ்நாள் முழுதும் கடைபிடித்தால் மேலும் சிறப்பானதாகும். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் அந்த வியாழக்கிழமைகளில் புலால் உணவுகளை நீக்கி உடல், மனம், ஆன்ம சுத்தியை கடைபிடிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகப்படி யாருக்கெல்லாம் அதிக சம்பளம் கிடைக்கும் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை பெற எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we described the Guru baghavan benefits in Tamil and also the Guru pariharan in Tamil.