உங்கள் குடும்ப நிலை உயர, பதவி உயர்வுகள் பெற இந்த சுலோகம் துதியுங்கள்

guru-graham

உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான தேவைகள், விருப்பங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக வேலைவாய்ப்புகளில் உயர்வான நிலை, திருமணம், குழந்தைப்பேறு போன்றவையே இருக்கிறது. ஒரு சிலருக்கு இவ்விடயங்கள் சரியான காலத்தில் ஏற்படுகின்றன. ஆனால் சிலருக்கு மட்டும் மேற்கூறியவை கிடைப்பதில் தடைகளும், தாமதங்களும் உண்டாகின்றன. நவகிரகங்களில் முழு சுப கிரகமாகவும் மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவருமாக குரு பகவான் இருக்கிறார். அந்த குரு பகவானுக்குரிய ஸ்லோகம் இதோ.

guru

குரு பகவான் ஸ்லோகம்

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்

புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

பிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. வியாழக்கிழமைகள் தோறும் கோவிலில் குரு பகவான் சன்னிதிக்குச் சென்று, குரு கிரக விக்ரகத்திற்கு 27 மஞ்சள் கொண்டைகடலைகள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். குடும்பத்தில் வீண் விரயங்கள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும்.

guru bagwan

- Advertisement -

நமது புராணங்களில் “வியாழன்” எனப்படும் நவகிரக நாயகனாகிய குரு பகவான் பிரகஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். வானுலக தேவர்களுக்கு தேவ குருவாக இருப்பவர் குரு பகவான் ஆவார். தன்னுடைய சக்திகள் அனைத்தையும் தேவர்கள் மனிதர்கள் மற்றும் இன்ன பிற உயிர்கள் நன்மை பெற அருள்மழையாக பொழிபவர். ஒரு மனிதனுக்கு மிக சிறந்த யோகங்கள், செல்வ சிறப்புகளையும் அளிப்பவராக வியாழ பகவான் இருக்கிறார் அவருக்குரிய இம்மந்திரத்தை தினமும் துதிப்போர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் மங்களங்கள் அதிகம் உண்டாக செய்யும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Guru bhagavan slokam in Tamil. It is also called Viyalan mantra in Tamil or Guru mantras in Tamil or Guru graha slokam in Tamil or Guru bhagawan manthirangal in Tamil.