நீங்கள் விரும்பியதை அடைய, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக செய்யும் மந்திரம் இதோ

kamalambikai

அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு பலவற்றை தருகிறது இயற்கை. எனவே தான் அந்த இயற்கையை இயற்கை தாய் என பலரும் அழைக்கின்றனர். பெண் தெய்வங்களை வழிபடுபவர்களும், அந்த தெய்வங்களை தங்களின் தாயாக கருதுகின்றனர். அதேபோல் அந்த தெய்வங்களும் தனது குழந்தைகளாக எண்ணி பக்தர்களுக்கு அனைத்தையும் வழங்குகின்றனர். அப்படித் தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் வழங்கும் தெய்வமாக கமலாம்பிகை தேவி இருக்கிறாள். அந்த தேவிக்குரிய “கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்” இதோ.

bhuvaneswari amman

கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்

பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம்
ப்ருந்தார கைர்வந்திதாம்
மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம்
மந்தஸ்மிதாம் ஸுந்தரீம்

பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம்
போகாபவர் கப்ரதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

அம்பிகையின் ஒரு வடிவமாக இருக்கும் கமலாம்பிகை தேவிக்குரிய அஷ்டகம் மந்திரம் இது இந்த அஷ்டகத்தை தினமும் காலை மற்றும் மாலையில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வருவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, அம்பிகையின் படத்திற்கு முன் தீபம் ஏற்றி, இந்த மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை ஜெபிப்பதால் விரும்பிய எதுவும் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார கஷ்ட நிலை நீங்கும்.

Amman

- Advertisement -

செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே, அழகின் இலக்கணமே, கர்ம பந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம் என்பதே இந்த அஷ்டகத்தின் பொதுவான பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
திடீர் பணவரவுகள் அதிகம் ஏற்பட மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kamalambika ashtakam in Tamil. It is also called as Kamalambika mantra in Tamil or Ambika mantras in Tamil or Devi slokas in Tamil or Virumbiyathai adaiya manthiram in Tamil.