குரு கிரகத்தின் அருளை பெற்று தரும் குரு பகவான் துதி

guru-bagawan-compressed

“குரு பார்க்க கோடி நன்மை” என்கிற ஒரு சொல்வழக்கு தமிழில் உண்டு. அனுபவம் பெற்றவர்களுக்கு இது நூறு சதவீதம் உண்மையான வாக்கியம் ஆகும். ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக “வியாழன்” எனப்படும் குரு பகவான் இருந்தாலும், ஜாதக ரீதியாக ஒரு சிலருக்கு குரு பகவான் பாதகமான ராசிகளில் பெயர்ச்சியடைவதால் சற்று கெடுதல்களான பலன்கள் ஏற்படும். இவற்றை போக்கி மேலும் பலவிதமான நற்பலன்களை அளிக்கும் “குரு பகவான் துதி” இதோ.

guru

குரு பகவான் துதி

குணமிகு வியாழ குருபகவானே
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.

வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி

guru bagwan

- Advertisement -

முழுமையான சுபகிரகமான குரு பகவானுக்குரிய சக்தி வாய்ந்த மந்திர துதி இது. இத்துதியை தினமும் காலையில் 9 முறை துதிப்பதால் பல நன்மைகள் உண்டாகும். குரு பகவான் வழிபாட்டிற்குரிய வியாழக்கிழமைகளில் இம்மந்திரத்துதியை கோவில்களில் நவகிரகங்களில் குருபகவான் விக்கிரகத்திற்கு கொண்டை கடலை மாலை சாற்றி, மஞ்சளை நிற பூக்களை சமர்ப்பித்து, 27 முறை இத்துதியை படிப்பதால் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருக்கும் குரு பகவானால் கெடுதலான பலன்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும். வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு கூடிய விரைவில் வேலை கிடைக்கும். பணவசதியை பெருக்கும் யோகங்கள் உண்டாகும்.

dhakshinamoorthi-logo

இரவு நேரங்களில் வானில் நாம் பார்க்கும் போது பொன்னிறத்தில் மின்னும் ஒரு கிரகமாக இருப்பது வியாழன் எனப்படும் குரு கிரகம் ஆகும். எனவே தான் நமது பண்டைய தமிழ் வானியல் சாஸ்திர அறிஞர்கள் வியாழன் கிரகத்திற்கு பொன்னன் என்கிற ஒரு பெயர் கொண்டு வியாழன் எனப்படும் குரு பகவானை அழைத்தனர். தன்னை வழிபடும் அனைவருக்கும் அருட்கடாச்சத்தை பொழிபவர் குரு பகவான். அவருக்குரிய இந்த துதியை முழுமனதோடு படித்து வருபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
நன்மைகள் பலவற்றை ஏற்படுத்தும் சாய் பாபா மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Guru bhagavan thuthi in Tamil or Guru bhagavan manthiram in Tamil. It is also caalled as Guru bhagavan mantra in Tamil or Guru thuthi lyrics in Tamil.