நன்மைகள் பலவற்றை ஏற்படுத்தும் சாய் பாபா மந்திரம்

Sai-baba-1-4

அனைவராலும் இறைவனை காணவோ அல்லது புரிந்து கொள்ளவோ இயலாது. எளிமையான மக்களும் இறைவனை அடைவதற்காக வழிகாட்ட தான் அவ்வப்போது பூவுலகில் சித்தர்கள், மகான்கள், ஞானிகள் உதிக்கின்றனர். அப்படி கடந்த நூற்றாண்டில் மக்கள் அனைவருடனும் வாழ்ந்து, அவர்களுக்கு இறைஞானத்தை வழங்கியவர் தான் “ஷீர்டி சாய் பாபா”. அவரை வழிபடுவதற்கான மந்திரம் தான் இது.

sai baba song tamil

சாய் பாபா மந்திரம்

ஓம் சாய் வேத் ஸ்வரூபாய நமஹ்

ஷீர்டி சாய் பாபாவை போற்றும் ஆற்றல் மிக்க மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மனதில் சாய் பாபாவை முன்னிறுத்தி தியானம் செய்யும் போது மனதிற்குள்ளாக உங்களால் எவ்வளவு எண்ணைக்கையில் முடியுமோ, அந்த அளவிற்கு மந்திரம் ஜெபம் செய்யலாம். குறைந்த பட்சம் 108 முறை உரு ஜெபிப்பது நல்லது. சாய் பாபாவிற்குரிய வியாழக்கிழமையில் சாய் பாபா கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருக்கும் சாய் பாபாவின் படத்திற்கு தீபம் ஏற்றி, பழம், கற்கண்டு போன்ற ஏதாவது ஒன்றை நைவேத்தியம் வைத்து மந்திரம் ஜபிப்பதால் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். தடை ஏற்படும் காரியங்களில் தடை நீங்கி அக்காரியங்கள் சிறந்த முறையில் நடந்து முடியும். நோய்களில் இருந்து விடுபடலாம்.

sai baba

எப்போதும் எளிமையாக எல்லோருடனும் அன்பாக இருந்தவர் சாய் பாபா. சாய் பாபா வாழ்ந்த ஷீர்டி எனப்படும் ஊர் பக்தர்களால் துவாரகமாயீ என அழைக்கப்படுகிறது. மறைந்து ஒரு நூற்றாண்டு காலம் மேல் ஆனாலும் தனது பக்தர்களை காப்பதில் அவர் காலங்களை கடந்து நிற்கிறார். தன்னை கடவுளாக மக்கள் பாவித்த போதும் தன அந்த இறைவனின் சேவகன் மட்டுமே என மிகுந்த தன்னடக்கத்துடன் கூறியவர். அந்த சாய் நாதனை வணங்குபவர்கள் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
தென்னாடுடைய சிவனே போற்றி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sai baba manthiram in Tamil. It  is also called as Shirdi Sai baba slogam in Tamil or Sai baba thuthi in Tamil.