தினம்தோறும் குருவிற்கு நன்றி தெரிவிக்க, குருவின் ஆசீர்வாதத்தை பெற, சொல்ல வேண்டிய மந்திரம்!

guru-mantra

ஒருவர் குருவை சந்திக்கச் செல்வதாக இருந்தாலும், அல்லது மடாதிபதி, ஆச்சாரியார் ஆன்மீக குரு இப்படி குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை சந்திக்கச் செல்வதாக இருந்தால், கட்டாயம் அவர்களுக்கு உண்டான மரியாதையை செலுத்த வேண்டும் என்பது அவசியமான ஒன்று. இப்படிப்பட்ட குருமார்களை சந்திக்கும் போது நமக்கு பெரிய பெரிய பலன்கள் ஏற்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த பலன்கள் என்ன என்பதைப் பற்றியும், தினம் தோறும் நாம் வீட்டில் இருந்தே நம்முடைய குருவுக்கு நன்றி தெரிவிக்க என்ன மந்திரத்தை உச்சரிக்கலாம்? என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

munivar

ஒருவருக்கு குரு காட்டிய வித்தை என்பது வெற்றிகரமான வித்தையாகத்தான் இருக்கும். ‘குரு இல்லா வித்தை குருட்டு வித்தை’ என்ற ஒரு கூற்றும் உள்ளது. அதாவது, அந்த வித்தைக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் இதற்கு அர்த்தம். இப்படிப்பட்ட குருமார்களை நீங்கள் சந்திக்க செல்லும்போது, குறிப்பாக வியாழக்கிழமை அன்று சந்திப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் புனர்பூசம், விசாகம், பூராட்டாதி இந்த குறிப்பிட்ட நட்சத்திரங்களில் செல்வதும் மிக அற்புதமான பலனை தேடித்தரும்.

குருமார்களை சந்திக்கும்போது ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் இவைகளை கொண்டு செல்வது அவசியம். அவர்களைப் பார்த்தவுடன் ஆண்களாக இருந்தால், சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துகொள்ளவேண்டும். பெண்களாக இருந்தால் நமஸ்காரம் செய்வது ஆசீர்வாதத்தை பெற்றுக் மிகவும் நல்லது. பொதுவாக எந்த பெரியவர்களை பார்த்தாலும் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது மிகவும் நல்ல ஒரு விஷயம்தான்.

vetrilai-pakku-pazham

ஜாதகத்தில் இருக்கும் குரு தோஷத்தை கூட, குருவின் ஆசீர்வாதத்தால் போக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பல மகத்துவங்களைக் கொண்ட உங்களுடைய, குருவிற்கு நீங்கள் தினந்தோறும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தால், இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். உங்களுக்கான குரு மந்திரம் இதோ..

- Advertisement -

ஓம் நமோ வந்தே குரு பரம்பராம்!

mantra sign

தினம்தோறும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நெய்தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய குருவை மனதார நினைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்து, குருவிற்கு நன்றி தெரிவித்து, அந்த நாள் பொழுதை தொடங்கிப் பாருங்கள்! குருவின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து, அந்த நாள் முழுவதும் சிறப்பாக செல்வதை உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
நாளை சித்திரை மாத சிவராத்திரி! இந்த மந்திரத்தை உச்சரித்து சிவபெருமானை வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Guru mantra Tamil. Guru manthiram. Guru manthiram in Tamil. Guru mantras Tamil.