- Advertisement -
Homeஆன்மீக குறிப்புகள்Guru Pariharam : குரு பகவானின் கடாச்சம் பெற உதவும் குரு பரிகாரம்

Guru Pariharam : குரு பகவானின் கடாச்சம் பெற உதவும் குரு பரிகாரம்

- Advertisement -

முழுமையான சுப கிரகமான குரு பகவான் ஜோதிட சாஸ்திரத்தில் பொன்னன் எனப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் வேறு எந்த கிரகம் பாதகமான நிலையில் இருந்தாலும், குரு கிரகம் மட்டும் கெடாமல் இருந்தால் மற்ற கிரகங்கள் தராத நற்பலன்களை குரு பகவான் கொடுத்துவிடுவார். எனினும் சிலரின் ஜாதகத்தில் சுப கிரகமான குருவின் நிலை கெட்டு இருந்தாலும் அல்லது அசுப கிரகங்களின் பார்வையே பெற்றிருந்தாலும் குரு பகவானின் முழுமையான நற்பலன்கள் கிடைக்காமல் செய்துவிடும். இப்படியே ஜாதகத்தில் குரு பகவானின் பலவீனமான நிலையை கொண்டவர்கள் குருவை பலப்படுத்தி தங்கள் வாழ்வில் நற்பலன்களை பெற்று வாழ செய்ய வேண்டிய குரு பரிகாரம் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

குரு பரிகாரம்

தங்களுக்கு குரு பகவானின் அருட்கடாட்சம் கிடைத்து, வாழ்வில் அனைத்து கட்டங்களிலும் இன்பமான பலன்களை அனுபவிக்க கீழ்கண்ட குரு பகவானுக்குரிய பீஜ மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பூஜை அறையில் அமர்ந்து 28 முறை அல்லது 108 முறை துதித்து வரவேண்டும்.
ஓம் க்ரம் க்ரீம் சஹ் குர்வே நம

- Advertisement -

எனும் இந்த குரு பகவானுக்குரிய மந்திரத்தை மேற் சொன்ன எண்ணிக்கையில் தினமும் துதித்து வருபவர்களுக்கு ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமான நிலையில் இருந்தாலும், அந்த குரு கிரகம் பலம் பெற்று வாழ்வில் நேர்மறையான பலன்கள் அதிகம் ஏற்படும், ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

தினந்தோறும் அல்லது வாரத்தில் ஒரு முறையாவது பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, அருகம்புல், வாழைப்பழம் போன்றவற்றை உணவாக கொடுத்து வருவது ஜாதகத்தில் இருக்கின்ற குருபகவானின் நிலையை மிக விரைவில் வலிமைப்படுத்த கூடிய ஒரு தாந்திரீக பரிகாரமாக இது திகழ்வதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமைகள் தோறும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் குரு பகவான விரதம் இருந்து வழிபடுவதால் ஜாதகத்தில் பாதகமான குரு பகவானின் நிலையையும் சாதகமானதாக மாற்றும்.

- Advertisement -

ஜாதகத்தில் குரு பகவான் நல்ல பலம் பெற்று வாழ்க்கையில் சிறப்பான நற்பலன்களை பெற வியாழக்கிழமைகளில் துறவிகளுக்கு மஞ்சள் நிற ஆடைகளை தானமாக அளிக்கலாம். மேலும் கோயில்களுக்கு தங்கம், புனித நூல்கள், மஞ்சள் மலர்கள் போன்றவற்றை தானமாக கொடுப்பதாலும் குரு பகவானின் அருட்கடாச்சம் பரிபூரணமாக கிடைக்கும், வியாழக்கிழமைகள் தோறும் மஞ்சள் நிற ஆடைகளையே அணிந்து கொள்வதாலும் குரு பகவானின் முழுமையான அருள் நமக்கு கிடைக்க வழிவகுக்கும்.

உங்களின் வலது கை பெரு விரலில் தங்கத்தில் செய்த மோதிரம் ஒன்றை அணிந்து கொள்வதும் ஜாதகத்தில் இருக்கின்ற குரு பகவானின் நிலையை வலிமைப்படுத்தும். உங்களின் வாழ்க்கையில் பொருளீட்டும் முயற்சிகள் அனைத்தையும் வியாழக்கிழமைகளில் தொடங்குவதும் நல்ல பலனை கொடுக்கும். குறிப்பாக வியாழக்கிழமைகளில் வருகின்ற ஏகாதசி தினங்களில் நற்காரியங்களை தொடங்கினால் நன்மைகளை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர பரிகாரம்

வியாழக்கிழமைகளில் தங்கள் சக்திக்கு இயன்றளவில் அன்னதானம் செய்வது குருபகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும். அன்னதானம் செய்வதன் காரணமாக உங்கள் ஜாதகத்தில் இருக்கின்ற குரு கிரக தோஷங்கள் நீங்கி, குரு கிரகத்தை பலப்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய பலன்கள் தங்க தடையில்லாமல் கிடைக்கச் செய்யும்.

சற்று முன்