குரு பெயர்ச்சி 2017 – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்

guru bagavaan

மேஷம்:

மேஷ ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறந்தது.
 • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரரை தரிசித்து வந்தால் நல்ல பலன் உண்டு.
 • சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவது சிறந்தது.
 • ஏழை எளிய மக்களின் மருத்துவ செலவிற்கு உதவுங்கள்.
 • அறுபடை முருகன் கோயில் ஒன்றுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்யவும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 65/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

- Advertisement -
 • தேய்பிறை சதுர்த்தியில் விநாயகர் கோயிலிற்கு சென்று அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடலாம்.
 • திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வரவும்.
 • வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
 • அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் படிப்பு செலவிற்கு உதவுங்கள்.
 • வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
 • சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடுதல் நல்லது.

மிதுனம்:

மிதுன ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.
 • செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தால் நல்ல பலன் உண்டு.
 •  சங்கரன்கோவிலுக்கு அருகேயுள்ள கரிவலம் வந்த நல்லூர் தலத்தில் அருளும் சங்கரநாராயணரை தரிசித்தால் நல்ல பலன் உண்டு.
 • உங்களால் முடிந்தவரை மரக்கன்றுகளை நடுங்கள். அதனால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

கடகம்:

கடக ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் நல்ல பலன் உண்டு.
 • திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று வழிபட்டால் நல்ல பலன் உண்டு.
 • வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
 • சாலை ஓரத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவுங்கள். அவர்கள் உங்களை மனதார வாழ்த்துவதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களை பெற முடியும்.

சிம்மம்:

சிம்ம ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 55/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • பிரதோஷ நாட்களில் நந்தீஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
 • ஞாயிற்று கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று வழிபடுங்கள்.
 • முதியோர் இல்லத்திற்குச் சென்று உங்களால் முடிந்த உதவியை அங்குள்ளவர்களுக்கு செய்யுங்கள்.
 • தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.

கன்னி:

கன்னி ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 80/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • பௌர்ணமி அன்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்தது.
 • திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வந்தால் நல்ல பலன் உண்டு.
 • வெள்ளிக்கிழமைகளில் காளிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறந்தது.
 • உங்களால் முடிந்தவரை ரத்த தானம் செய்யுங்கள்.
 • வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலையை தட்சணாமூர்த்திக்கு அணிவித்து அருள் பெறுங்கள்.

துலாம்:

துலாம் ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 55/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தால் நல்ல பலன் உண்டு.
 • அருகிலுள்ள சிவாலயத்தில் முருகப் பெருமானை தரிசிப்பது சிறந்தது.
 • வெள்ளிக்கிழமைகளில் காளிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறந்தது.
 • ஏழை மக்களுக்கு பசியாற உணவளியுங்கள்.

விருச்சகம்:

விருச்சக ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள்.
 • கள்ளக்குறிச்சிக்கு அருகேயுள்ள ராவுத்தநல்லூர் என்னும் ஊரில் உள்ள சோளீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
 • சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.
 • தந்தையை இழந்த பிள்ளைகளின் படிப்பிற்கு உதவுங்கள்.

தனுசு:

தனுசு ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • சதுர்த்தி திதியன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
 • சிதம்பரம் நடராஜர் கோவிலிற்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
 • திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
 • பணமின்றி வாடும் தொழிலாளர்களுக்கு உங்களால் இயன்றவரை உதவுங்கள்.

மகரம்:

மகர ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 60/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • காத்திகையன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மை தரும்
 • தாராபுரத்தில் உள்ள அகத்தீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
 • வியாழக்கிழமைகளில் நவக்கிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.
 • ஏழைகளின் மருத்துவ செலவிற்கு உதவுங்கள்.
 • அபிராமி அந்தாதியில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது மிகமிக நன்மை தரும்.

கும்பம்:

கும்ப ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • சதுர்த்தி அன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்யுங்கள்.
 • விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரரை தரிசித்துவாருங்கள்.
 • தமிழ் மாதபிறப்பு நாட்களில் அருகில் உள்ள ஐயப்பன் கோயிலிற்கு சென்று வழிபடுங்கள்.
 • விபத்தால் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்.
 • ஏகாதசி அன்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

மீனம்:

மீன ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபடுங்கள்.
 • திட்டக்குடி வசிஷ்டேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
 • வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
 • ஏழை எளிய மக்களுக்கு முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள்.

2017 குரு பெயர்ச்சிக்கான உங்கள் ராசி பலன் சிறப்பாய் அமைய இறைவனை பிராத்திப்போம்