அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் – ஏப்ரல் மாதம் வரை

guru

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

கடந்த வருடம்(2017) ஆவணி மாதம் 17 ஆம் தேதி குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் என்பது நாம் அறிந்ததே. குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே வேறு ராசிக்கு முன்னோக்கி சென்றால் அதை நாம் அதிசாரம் என்கிறோம். அந்த வகையில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி முதல் ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வரை அதிசாரத்தில் குரு பகவான் செல்வதால் உங்கள் ராசிக்கு என்ன பலன்களை தரப்போகிறார் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:

meshamமேஷ ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் செல்கிறார். இதன் காரணமாக உங்களுக்கு தேவை இல்லாத பல செலவுகளும் பண நெருக்கடியும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதே போல உடல் அளவிலும் மனதளவிலும் சற்று சோர்ந்து காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு மன கசப்புகள் வந்து செல்லும். அலுவலக பணிகளிலும் தொய்வு இருக்க கூடும். வியாபாரிகள் நல்ல யுக்தியோடு உழைத்தால் மட்டுமே எதிர்பாத்த லாபத்தை பெறக்கூடிய காலம் இது. நீங்கள் முருகப்பெருமானை வழிபாட்டு வந்தால் பிரச்சனைகள் சற்று குறையும்.

மேஷ ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

ரிஷபம்:

- Advertisement -

rishabamரிஷப ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு இதன் காரணமாக நன்மைகள் நடக்கும். கானவன் மனைக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பண பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். திருமணத்திற்காக வரன் பார்ப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வரன் அமையும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வருவதன் மூலம் உங்கள் வாழ்வு மேலும் சிறப்படையும்.

ரிஷப ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம்:

midhunamமிதுன ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் செல்கிறார். இதன் மூலம் உங்களுக்கு சில பிரச்சனைகள் வரும். கணவன் மனைவிக்கு இடையே தேவை இல்லாத சண்டை வந்து செல்லும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் நடக்காமல் போக வாய்ப்புளளது. அரசாங்கம் சார்ந்த விடயங்கள் தடைபடும். ஒரு சிலருக்கு கௌரவ குறைவான சில சிக்கல்களும் வரும். ஆகையால் கவனமாக இருப்பது நல்லது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்த பிரச்சனைகள் யாவும் மறைந்து நல்ல பலன்கள் வந்து சேரும். பெருமாளை வணங்கி வந்தால் உங்களுக்கான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

மிதுன ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கடகம்:

kadagamகடக ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் செல்கிறார். இதன் காரணமாக நீங்கள் பல நல்ல பலன்களை பெற போகிறீர்கள். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் தீரும். சொத்து விடயத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். பிள்ளைகளால் நன்மதிப்பை பெறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களில் அறிமுகம் கிடைக்கும். அலுவலக பணியில் உள்ளோருக்கு பதவி உயர் அல்லது சிறந்த பணிக்கான அவார்ட் போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதனால் லாபமும் அதிகரிக்கும். அனைத்து நன்மைகளையும் நீங்கள் எந்த தடையும் இன்றி பெற தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.

கடக ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சிம்மம்:

simmamசிம்ம ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் செல்கிறார். இதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்வது அவசியம். பணி காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லவேண்டிய சூழல் ஏற்படலாம். ஒரு சிலருக்கு பணியில் இடமாற்றம் அல்லது தங்கி இருக்கும் வீட்டில் இருந்து வேறு வீட்டிற்கு மாறுவது போன்ற சூழல்கள் ஏற்படலாம். வியாபாரிகளும் சரி அலுவலக பணிகளில் ஈடுபட்டுளோரும் சரி தேவை இல்லாமல் வாயை கொடுத்து யாரிடமும் பிரச்சனை செய்யாமல் இருப்பது நல்லது. ஆஞ்சிநேரையை வழிபட்டு வந்தால் தடைகள் விலகும்.

சிம்ம ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கன்னி :

kanniகன்னி ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் செல்கிறார். இதன் காரணமாக உங்களுக்கு கலவையான பலன்கள் இருக்கும். உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள் ஆனால் அதே சமயம் அவர்கள் உங்களிடம் பணம் அல்லது வேறு ஏதாவது உதவியை கேட்டு தொந்தரவும் செய்யக்கூடும். மனதளவில் சில குழப்பங்கள் அவ்வப்போது வந்து மறையும். சொத்து சம்மந்தமான முடிவுகளை எடுக்கையில் நிதானமாக இருந்து பலரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. அலுவலக பணி எப்போதும் போல இருக்கும். வியாபாரிகள் சோம்பேறியாக இல்லாமல் கடுமையாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். முடிந்தவரை பெருமாள் கோவிலுக்கு சென்று அரச்சனைகள் செய்தால் நன்மைகள் பெருகும்.

கன்னி ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

துலாம்:

thulamதுலாம் ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் செல்கிறார். இதனால் மனதளவில் உங்களுக்கு பக்குவம் வரும். எதையும் சாதிக்கும் துணிவு பிறக்கும். இதுவரை இருந்து வந்த உடல் பிணிகள் நீங்கும். இதுவரை ஏதோ ஒரு காரணத்தால் தடை பட்டு வந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டில் பண புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்கும். அலுவலகத்தில் நர் பெயர் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை அனைத்தும் கை கூடிவரும்.

துலாம் ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

விருச்சிகம்:

virichigam

விருச்சிக ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசியில் அமர்கிறார். இதன் காரணமாக சில நேரங்களில் குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்ப பிரச்சனைகளை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. செய்யும் வேலைகள் அனைத்திலும் கவனம் தேவை. நீங்கள் செய்யும் சிறிய தவறுகள் கூடு பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் காலம் இது. அலுவலக பணியில் உள்ளவர்கள் மிகுந்த கவனத்தோடு பணியாற்றுவது நல்லது. வியாபாரிகள் சக வியாபாரிகளிடம் உஷாராக இருப்பது நல்லது. துன்பங்கள் விலக தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.

விருச்சிக ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

தனுசு:

dhanusu

தனுசு ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் செல்கிறார். இதன் காரணமாக நீங்கள் கலவையான பலன்களை பெறுவீர்கள். வீட்டில் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தேவை இல்லாமல் குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் பகிர்வதை தவிருங்கள். மூன்றாவது நபர்களால் குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சனைகள் வரக்கூடும். அலுவலகத்தில் பணி சற்று அதிகமாக இருக்கும். ஆனால அதற்கான பாராட்டுகளை நீங்கள் பெற கால தாமதம் ஆகும். வியாபாரிகள் சிறந்த உக்தியோடு வியாபாரம் செய்வது அவசியம். திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிப்பட்டு வந்தால் பிரச்சனைகள் குறையும்.

தனுசு ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மகரம்:

magaramமகர ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் செல்கிறார். இதனால் உங்களுக்கு பல நல்ல விடயங்கள் நடக்கும். இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே உறவு மேம்படும். அலுவலகத்தில் நன் மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் அனைத்து விடயங்களும் தடை இன்றி கிடைக்கும்.

மகர ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கும்பம்:

kumbamகும்ப ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நற்பலன் மற்றும் சற்று மந்தமான பலன் என இரண்டும் கலந்தே இருக்கும். பண வரவை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த படி இருக்கும். ஆனால் தேவை இல்லாத சில சிக்கல்கள் ஏற்படும். மறைமுக எதிரிகளால் வியாபாரிகளுக்கும் அலுவலக பணியில் இருப்பவர்களுக்கும் சில தொல்லைகள் இருக்க கூடும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை கொள்வது அவசியம். இந்த காலகட்டத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாழ்வில் சங்கடங்கள் விலகி நன்மை அதிகரிக்க தட்சிணாமுர்த்தியை வழிபட்டு வாருங்கள்.

கும்ப ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மீனம்:

meenamமீன ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் செல்கிறார். இதன் மூலம் உங்களுக்கு நற்பலன்களே அதிகம். சொத்து ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். தாயின் அரவணைப்பு இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

மீன ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் அறிய தெய்வீகம் மொபைல் ஆப் ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.