குரு பெயர்ச்சி பலன்கள் 2019 கன்னி

கன்னி: ( உத்திரம் 2, 3, 4காம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2 ம் பாதம்)

Virgo zodiac sign

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக பேச கற்றுக் கொள்வீர்கள்.  உறவினர்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து விடையத்தில் அதிகப்படியான கவனம் தேவை. சொத்தை விற்பதாக இருந்தாலும் வாங்குவதாக இருந்தாலும் பண விடயத்திலும், ஆவணங்கள் விடயத்திலும் அதிகப்படியான அக்கறையோடு இருப்பது நல்லது.

கணவன் மனைவிக்குள் மூன்றாம் நபர் மூலமாக சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் உங்கள் குடும்ப விடையத்தை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. தனவரவு அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். உங்களின் பலம் பலவீனத்தை அறிந்து வைத்திருப்பது நல்லது.

தொழில்:
உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். ஆனாலும் சில நேரங்களில் மேலதிகாரிகளின் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பல நேரங்களில் ஓவர் டைம் எடுத்து வேலை செய்யவேண்டிய சூழல் உருவாகும். அதற்கேற்ற ஊதியம் உடனே கிடைத்து விடாது. அதற்காக மேலதிகாரிகளை கோபித்துக்கொண்டு அவர்களிடம் முரண்டு பிடிக்க வேண்டாம். பதவி உயர்வும் சம்பள உயர்வும் தாமதமானாலும் நிச்சயம் உங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியம் உங்களிடம் வந்து சேரும்.

Guru peyarchi palangal Kanni
Guru peyarchi palangal Kanni

வியாபாரிகளை பொறுத்தவரை சில நேரங்களில் மந்தமான சூழல் உருவாகும், சில நேரங்களில் விற்றுவிறுப்பாக இருக்கும். சந்தை நிலவரங்களை நன்கு ஆராய்ந்த பிறகு எதிலும் முதலீடு செய்வது நல்லது. பெரும் முதலாளிகள் வரை சிறிய வியாபாரிகள் வரை உங்களால் முடிந்த அளவிற்கு சில விளம்பர யுக்திகளை கையாண்டால் அதன் மூலம் உங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முனைவீர்கள்.

- Advertisement -

கல்வி:
பள்ளி மணர்களை பொறுத்தவரை படிப்பில் ஆர்வம் கூடும், பாடத்தில் வரும் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்க தயங்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களின் அறிவாற்றல் மேம்படும். கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். கல்லூரி படிப்பை முடித்த பிறகு நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க நினைப்போருக்கு அதற்கான வாய்ப்பு சில போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கும். எதிலும் விடா முயற்சியோடு செயல்படுவது நல்லது.

Guru peyarchi palangal Kanni
Guru peyarchi palangal Kanni

பொருளாதாரம்:
அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியம் வெற்றி அடைந்து அதன் மூலம் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். அதே நேரம் சில நேரங்களில் வீண் விரயங்களும் ஏற்படும். புதிதாக வீடு கட்டும் யோகமும் உண்டு. அதே போல வீட்டை கட்டி பாதியிலேயே விட்டுருந்த பலர் இந்த காலகட்டத்தில் அதை கட்டி முடிக்க வாய்ப்புகள் உண்டு. கல்விக்காக அதிகம் செலவு செய்ய நேரிடலாம். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத்தில் சில ஏற்ற தாழ்வுகள் அவ்வப்போது காணப்பட்டாலும் நிறைய நல்ல விடையங்கள் நடக்கும்.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டியவை:
எப்போது வேண்டுமானாலும் திடீர் செலவு வரலாம். அதனால் பணத்தை சேமித்து வைத்திருப்பது நல்லது. சில சமயங்களில் எதிலும் நாட்டமில்லாத ஒரு நிலை இருக்கும். அது போன்ற நேரங்களில் இறைவனை வழிபடுவது நல்லது. சொத்து வாங்குதல் மற்றும் தொழிலில் சில ஏமாற்றங்கள் ஏற்படலாம். பண விடயத்தில் கவனம் தேவை.

duru sisyan

பரிகாரம்:
குலதெய்வத்தை முறையாக வழிபடுவது நல்லது. ஊனமுற்றோர்களுக்கு உதவுங்கள். வியாழ கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.