குரு பெயர்ச்சி பலன்கள் 2018 தனுசு

guru-peyarchi

தனுசு:

Dhanusu Rasi

மற்றவர்களுக்கு உதவி புரியும் நல்ல மனதை கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 04-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதனால் இவ்வளவு காலம் நன்றாக இருந்த பொருளாதார நிலையில் சிறிது சுணக்கம் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். டென்ஷன் அதிகமாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் அதிகம் ஏற்படும். எல்லாவற்றிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது உங்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பிறருடனான பணம் கொடுக்கல் வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் வெளிநபர்களிடம் பேசும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் எதுவும் இருக்காது. பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க முடியும்.

ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள், வயிற்றுக்கோளாறுகள் போன்ற உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியிலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களின் வருகையால் உங்களுக்கு சற்று நிம்மதி ஏற்படும். காண்ட்ராக்ட் தொழிலில் இருப்பவர்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். தொழில் கூட்டாளிகளே துரோகம் புரிய கூடும். வியாபாரங்களில் சுமாரான நிலையே இருந்தாலும் பொருட்கள் அனைத்தும் தேக்கம் ஏற்படாமல் விற்று தீரும்.

உத்தியோகிஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியும் திருப்தியான நிலையும் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அரசியல்வாதிகள் பொது மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பு எதிலும் ஒரு முடிவுக்கு வருவது நல்லது. விவசாயிகள் அதிக விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. அரசு வழியில் எதிர்பார்த்த பயிர் மானியங்கள் கிடைக்கும். கலைஞர்கள் ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பிறரிடம் கடனை வாங்கும் நிலையை தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

Guru peyarchi palangal Dhanusu
Guru peyarchi palangal Dhanusu

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவதற்கு முன்பு பல முறை யோசித்து ஈடுபடுவது நல்லது. பண வரவு ஓரளவிற்கு நல்லபடியாக இருப்பதால் வாங்கிய கடன்களை முதலில் அடைப்பீர்கள். தொழில் வியாபாரங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை தவற விடாமல் பிடித்து கொள்வது நல்லது. அவ்வப்போது மருத்துவ செலவுகளும் ஏற்படும்.

- Advertisement -

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களால் பல அனுகூலங்களை பெற முடியும். அசையா சொத்துக்களால் சிறிது பொருள் விரயம் ஏற்படும். செய்யும் பணிகளில் நிம்மதி இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது சிறிது மனசஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உடலில் வயிறு சம்பந்தமான நோய்கள் சிலருக்கு ஏற்ப்பட்டு நீங்கும். பொருள் வரவில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

அன்றாட பணிகளையே சரியாக செய்ய முடியாத நிலை சிலருக்கு ஏற்படும். எந்த ஒரு விடயத்திலும் விட்டுக் கொடுத்து செல்வது அனைவருக்கும் நன்மை தரும். உங்களுக்கு மறைமுக எதிரிகள் அதிகமாவர். கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வருவார்கள். உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

Guru peyarchi palangal Dhanusu
Guru peyarchi palangal Dhanusu

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தினரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணிமாறுதல்கள் கிடைக்கும். வேலைபளு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசாங்க வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவததை ஒத்திப்போடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

எல்லா விடயங்களிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும். எல்லாவற்றிலும் கடினமான முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே விரும்பிய பலன்களை பெற முடியும். தொழில் வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் இருக்கும். சக பணியாளர்களால் தேவையற்ற பிரச்சனைகளை சிலர் சந்திக்க கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு குரு 12 ல் இருப்பதால் குரு பகவானை வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். இக்கிழமைகளில் குரு பகவானுக்கு விரதமிருப்பதும் சிறந்தது. சனி பகவானும் உங்களுக்கு பாதகமான நிலையில் இருப்பதால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட சனியின் கெடுபலன்கள் ஏற்படாமல் காக்கும்.