குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – கடகம்

guru-peyarchi-palan-kadagam

கடகம்: ( புனர்பூசம் 1ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் கடக ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Kadagam Rasi

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். கடக ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் இருந்து கொண்டு 11, 1, 3 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே கடக ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது பல நன்மைகளை அளிக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு மற்றும் உங்களுடைய மனதிற்கு பிடித்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். நீங்களும் அவர்களை விட்டுக்கொடுக்காமல் பல இடங்களில் ஒற்றுமையாக செயல்படுவீர்கள். சிறுசிறு ஊடல்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. உங்கள் ராசியை பொறுத்தவரை வருகின்ற குரு பெயர்ச்சியானது மனதிற்கு மகிழ்வையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.

உத்தியோகம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த முழு ஒத்துழைப்பு அதற்குரிய பலன்களை அள்ளி உங்களுக்கு கொடுக்கப் போகிறது. பெரிய முதலீடுகள் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் இருக்கும். உத்தியோகத்தை பொறுத்தவரை சுமாரான பலன்கள் தான் என்றாலும் நண்பர்கள் உங்களுக்கு பூரண ஆதரவு கொடுப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய புதிய விஷயங்களில் வரும் வாய்ப்புகள் தட்டிப் போவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

Guru peyarchi palangal Kadagam
Guru peyarchi palangal Kadagam

பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஏற்றத்துடன் காணப்படும். உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய அமைப்புகள் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அமோக வெற்றி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு சரியான காலகட்டமிது. வருகின்ற வாய்ப்புகளை நழுவவிடாமல் சரியாக பயன்படுத்திக் கொண்டால் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணலாம். சொத்துக்கள் மற்றும் பூர்வீக சொத்துக்கள் வாயிலாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தாமத பலன்கள் உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை:
குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை உங்களுடைய கருத்துக்களுக்கு மாற்று கருத்துகள் கூறி வந்தவர்கள் இப்போது உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நீங்கள் சொல்வதும் சரிதான் என்பது போல் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் வண்ணம் வெற்றிகள் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கும். நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருக்கும் விஷயம், சுபச் செய்திகள், புதிய வரவுகள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -
Guru peyarchi palangal Kadagam
Guru peyarchi palangal Kadagam

ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு சில தொந்தரவுகளை கொடுக்கும். அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய உங்கள் ராசிக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கக்கூடும். எனவே எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கையாள்வது சிறந்த பலன் தரும். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு கொண்டிருந்தால் உங்களுடைய உடல்நிலை சீராக இருக்காது. எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

guru-bhagavan

செய்ய வேண்டிய பரிகாரம்:
கடக ராசிக்காரர்கள் தினமும் பறவைகளுக்கு உணவளிப்பது நல்ல பலன் தரும். வியாழன் கிழமை தோறும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வர சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். பசுக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து வர நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மிதுனம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.