குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மிதுனம்

guru-peyarchi-palan-mithunam

மிதுனம்: (மிருகசீரிடம் 2, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Mithunam Rasi

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தில் இருந்து கொண்டு 12, 2, 4 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே மிதுன ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது எதையும் கஷ்டப்பட்டு தான் பெற வேண்டிய சூழ்நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் மட்டுமே உங்களுடைய போராட்டத்தில் நீங்கள் வெற்றி பெறலாம். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசவில்லை என்பதை உணர்ந்து உங்களுடைய முழு முயற்சியை செலுத்தினால் ஒழிய முன்னேற்றம் என்பது கஷ்டம் தான்.

உத்தியோகம் மற்றும் தொழில்:
சுய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தங்களுடைய தொழிலை இன்னும் விரிவுபடுத்த நினைத்தாலும் அதற்கேற்ற முதலீடு செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். பணப்பற்றாக்குறை உங்களை முன்னேற்ற பாதையில் செல்வதை தடுக்கும். வியாபாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இப்போது கையாள்வதை விட, புதிய உத்திகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் மந்த நிலை இந்த குரு பெயர்ச்சிக்குப் பிறகும் தொடர்ந்து நீடிக்கும். புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதில் சாதகமற்ற சூழ்நிலை நிலவுகிறது. எதிலும் சிறிது காலம் வரை மௌனம் காப்பது ஒன்று சிறந்தது.

Guru peyarchi palangal Mithunam
Guru peyarchi palangal Mithunam

பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சற்று இறக்கத்துடன் காணப்படும். எதையும் சமாளிக்க மனதில் தைரியத்தையும், செயலில் உத்வேகத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக எப்போதும் தக்க சமயத்தில் செயல்படுவார்கள். அத்தியாவசிய செலவுகளை தவிர தேவையில்லாதவற்றில் செலவு செய்வது பண இருப்பை குறைக்கும். வங்கி சேமிப்பு கணிசமாகக் குறையும். வீண் விரயங்களும் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

குடும்ப வாழ்க்கை:
குடும்ப உறவுகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவிக்கு இடையே சரியான புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு நிச்சயம் நல்ல புரிதல் உண்டாகும். ஒருவரை ஒருவர் சரியான தருணத்தில் மனம் விட்டு பேசுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சில திட்டங்களை தீட்டுவீர்கள். மூத்தவர்களின் அனுமதி இன்றி நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் சில பிரச்சனைகளை உண்டாக்கலாம். எனவே கவனம் தேவை.

- Advertisement -
Guru peyarchi palangal Mithunam
Guru peyarchi palangal Mithunam

ஆரோக்கியம்:
மிதுன ராசிக்காரர்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். கிடைத்ததை சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. மேலும் இந்த குருபெயர்ச்சி ஆனது உங்களுடைய ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகளை கொடுக்க வாய்ப்புள்ளது. கூடுமானவரை உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. அதிலும் பெண்களைப் பொருத்தவரை பணி சுமை காரணமாக சில உடல் உபாதைகள் சந்திப்பீர்கள். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

Guru Baghavan

செய்ய வேண்டிய பரிகாரம்:
மிதுன ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சிக்கு பிறகு புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வர தொழில் வளம் சிறக்கும். வியாபார விருத்தி உண்டாகும். அது போல் இல்லாத ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வாங்கிக் கொடுப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – ரிஷபம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.