குரு பெயர்ச்சி பலன்கள் 2018 கன்னி

guru-peyarchi kanni

கன்னி:

Kanni Rasi

அனைவரிடமும் இதமாக பழகும் தன்மை கொண்ட கன்னி ராசசிகார்களே 04-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதனால் நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தடைகளும் தாமதங்களும் உண்டாக வாய்ப்புள்ளது. எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றிபெறக்கூடிய நிலையிருக்கும். இந்த ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனியும் நடைபெறுவதால், அனைத்திலும் கஷ்டங்கள் இருக்கவே செய்யும். எல்லாவற்றிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழ்நிலை இருக்காது. திருமணம், புது வீடு கட்டுதல் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். பிறருடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் இழைக்கக்கூடிய நிலை ஏற்படும். பயன்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.

அதீத உடல் சோர்வால் எந்த விதமான பணிகளை செய்வதிலும் கஷ்டம் இருக்கும். உடல் நிலையும் அவ்வப்போது பாதிப்படைந்து பிறகு குணமாகும். மனக்கவலைகளும், மனஅழுத்தங்களும் அதிகரிக்கும் இருக்கும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடன் பிறந்தவர்களால் மனக்கவலைகள் ஏற்படும். உறவினர்களிடையே சுமூக உறவு இருக்காது. குடும்பத்தேவைகளுக்காக கடன் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் பிரச்சனைகள் எழலாம். தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு வியாபாரிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனையை கேட்பது சிறந்தது. அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

ஊழியர்கள் எதிலும் சற்று பணிந்து போவது தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். உங்களுக்கான பதவி உயர்வுகளை பிறர் தட்டி பறிக்க முயற்சி செய்வார்கள். பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பழியேற்க நேரிடும். அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளை காப்பாற்றி கொள்ள படாத பாடு படுவார்கள். சொந்த கட்சியினரே துரோகம் செய்வார்கள். மக்களிடம் அவப்பெயரை பெறக்கூடிய சூழ்நிலையிருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும். அவசரப்பட்டு கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கலைத்தொழிலில் இருப்பவர்கள் தங்களின் சக தொழிலாளர்களுடன் அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்பட்டும்.

Guru peyarchi palangal Kanni
Guru peyarchi palangal Kanni

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

- Advertisement -

இந்த காலகட்டத்தில் சில சமயம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே கடன்கள் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உடல் நல பாதிப்புகளும் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

இக்காலத்தில் எதிலும் சற்று ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உடலிலும் மனதளவிலும் மந்த நிலை, உற்சாகமின்மை போன்றவை இருக்கும். எல்லாவற்றிலும் கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே விரும்பிய பலன்களை பெற முடியும். வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதாக இருந்தால் பல முறை ஆலோசித்த பின்பு ஈடுபடுவது நல்லது. அவ்வப்போது உங்களுக்கு உடல் நல பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். 13-2-2019 அன்று ஏற்படும் ராகு – கேது கிரக பெயர்ச்சிகளுக்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் ஓரளவு நல்ல மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்தினால் நன்மை பயக்கும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பணியிலிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபார நிமித்தமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள கூடிய நிலை உண்டாகும். புதிய தொழில் கூட்டாளிகளின் சேர்க்கையால் சிலருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

Guru peyarchi palangal Kanni
Guru peyarchi palangal Kanni

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

தம்பதிகளிடையே பிரச்சனைகள் எழலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. புது வீடு கட்டுதல் மற்றும் வீடு மனை வாங்கும் திட்டங்களை சற்று தாமதப்படுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். குடும்பத்தார் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் கால பலன்கள்

குடும்பத்தார்களிடம் அடிகடி வாக்குவாதங்கள் ஏற்படும். பிறரின் சொந்த விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. சாப்பிடும் உணவு விடயங்களில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். தொழில் வியாபாரங்களில் சற்று மந்த நிலையே இருக்கும். பிறரின் பிரச்சனைகளுக்கு மத்தியஸ்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.

பரிகாரம்

அர்த்தாஷ்டம சனி உங்கள் ராசிக்கு நடைபெறுவதால் தொடர்ந்து சனிக்கிழமைகளில் சனி பகவானுக்குரிய மந்திரங்களை கூறி வழிபட்டு, காகங்களுக்கு உணவு அளித்து வர வேண்டும். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு விரதமிருந்து வழிபட்டு வருவதும் சிறந்த பரிகாரம் ஆகும். மஞ்சள் நிற ஆடைகள், கைகுட்டைகள் மற்றும் துண்டுகளை அதிகம் பயன்படுத்துவது நல்லது.