2022-ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள் யாரெல்லாம் தெரியுமா?

guru-astro-wheel
- Advertisement -

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கிறது. கால அளவுகள் மாறினாலும், ஒன்பது கிரகங்களும் ராசியிலிருந்து பெயர்ச்சி ஆவது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். ஆனாலும் குரு பெயர்ச்சியின் பொழுது மட்டுமே அதீத எதிர்பார்ப்புகள் பக்தர்களிடையே காணப்படும். அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு 2022-இல் கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்க போகிறது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

இவ்வாண்டு குரு பகவான் தன்னுடைய சொந்த வீடான மீன ராசியில் அமர்ந்து ஓராண்டு காலம் பயணிக்க இருக்கிறார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதற்கு ஓராண்டு காலம் தேவை. ஆனால் இடையிடையே அதிசார பெயர்ச்சியாக, வக்ர பெயர்ச்சியாக வேறு ராசிக்கு பயணம் செய்து விட்டு வருவதும் உண்டு. குரு இருக்கும் இடத்தை விட, அவர் பார்க்கும் இடத்திற்கு அதிர்ஷ்டம் பெருகும்.

- Advertisement -

ரிஷபம்:
உங்கள் ராசியிலிருந்து பத்தாமிடத்தில் பயணிக்க இருக்கும் குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு வரக்கூடிய லாபம் பன்மடங்கு பெருகும். சுயமாக தொழில் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் சந்தித்து வந்திருந்த பொருளாதார நெருக்கடிகள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குருவின் பார்வை நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றியை கொடுக்க கூடிய அமைப்பாக உள்ளது. திருமணத்தடை, புத்திர பாக்கிய தடை போன்றவை அகன்று இவ்வாண்டு சுப செய்திகளை பெறுவீர்கள்.

கடகம்:
உங்கள் ராசியில் இருந்து 9-ஆம் இடமான மீன ராசியில் பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்ய இருக்கும் குரு பகவானால் அற்புதமான பலன்களை அனுபவிக்க இருக்கிறீர்கள். குறிப்பாக மன ரீதியான பிரச்சனைகளை எதிர் கொண்டு வந்திருந்த நீங்கள் அதிலிருந்து விலகி மகிழ்ச்சியான சூழ் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். குருவின் பார்வை 3, 5 ஆகிய இடங்களில் இருப்பதால் இளைய சகோதரர்கள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கையில் சுபச் செய்திகளை பெறுவீர்கள்.

- Advertisement -

கன்னி
குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது பதிவதால் அதிக நன்மைகளை அடைய கூடிய ராசிகளில் ஒன்றாக உங்கள் ராசியும் இவ்வாண்டு அமைய இருக்கிறது. திடீர் திடீரென அதிர்ஷ்டங்கள் வந்து சேரக்கூடிய வாய்ப்பு உண்டு. உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த கவலை உங்களை விட்டு நீங்கி, மகிழ்ச்சியை உண்டாக்கிக் கொடுக்கும். இழந்த பொருள், பணம், செல்வம் போன்றவற்றை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்புகளை பெற போகிறீர்கள். லாபம், முயற்சி ஆகிய ஸ்தானத்தின் மீது குரு பார்க்க இருப்பதால் எதிர்பாராத தன லாபம் பெருக இருக்கிறது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் கொடுக்கும் என்பதால் அயராது உழைக்க பாருங்கள்.

விருச்சிகம்:
உங்கள் ராசியில் இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்ய இருக்கும் குரு பகவான் மூலம் உங்களுக்கு பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீர்ந்து பெரிய அளவிலான பண வரவு கிடைக்க இருக்கிறது. இல்லத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய முயற்சிகளில் மனம் மகிழும் படியான நல்ல வெற்றி கிடைக்கும். சனி பகவான் கொடுத்துக் கொண்டிருந்த பிரச்சனைகளும், மனக்குழப்பங்கள் நீங்கி குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களுடைய லாப ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகிய இடங்கள் அதிர்ஷ்டத்தை பெற இருக்கிறது. தந்தை வழி ஆரோக்கியம் சீரடையும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்:
உங்கள் ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயரும் குரு பகவான் இனி ஜென்ம குருவாக இருந்து வந்த நிலை மாறி, குடும்ப ஸ்தானத்தில் பொறுப்பேற்க இருக்கிறார். இதனால் குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும். இவ்வாண்டு இதுவரை நீங்கள் பட்ட துன்பத்திற்கு மொத்தமாக சேர்த்து நற்பலன்களை வாரி வழங்க இருக்கிறார். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். உங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த கஷ்டங்கள், உங்களை விட்டு நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நீண்ட நாள் நோய்கள் விலகும்.

- Advertisement -